#Breaking:முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு

Default Image

முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி குற்றவாளி என சிறப்பு  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னதாக, 1991-96 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில்,ஊழல் வழக்கில் முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் இந்திர குமாரி,அவரது கணவர் பாபு மற்றும் சண்முகம் ஆகிய 3 பேர் குற்றவாளிகள் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மாற்றுத்திறனாளிகளை வழிநடத்துவதாகக் கூறி அரசிடம் இருந்து முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி கணவர் பாபு ரூ.15.45 லட்சம் முறைகேடாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில்,இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரி உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து,3 பேரின் தண்டனை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக இந்திர குமாரி உள்ளார்.மேலும்,வழக்கில் தொடர்புடைய கிருபாகரன் இறந்துவிட்ட நிலையில்,வெங்கடேசன் என்பவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி தற்போது திமுகவில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்