தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி.!
சென்னை : தமிழ்நாட்டில் நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரியும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுபதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணைக் கொலை செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, தெரு நாய்களால் பரவும் ரேபிஸ் போன்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தவும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2022-ல் 3,65,318 ஆக இருந்த நாய்க்கடி சம்பவங்கள் 2023-ல் 4,40,921 ஆக உயர்ந்துள்ளதாகவும், இதில் குழந்தைகள் […]