உத்தரகாண்ட் மானசா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் – 6 பேர் உயிரிழப்பு.!

ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயில் சாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 35 பேர் காயமடைந்தனர்.

Mansadevi temple stampede

ஹரித்வார் : உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோயிலில் இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்தனர் என்று கார்வால் மண்டல ஆணையர் வினய் ஷங்கர் பாண்டே தெரிவித்துள்ளார். திருவிழாவில் மின்கசிவு ஏற்பட்டதால் பக்தர்கள் அலறியடித்து ஓடி நெரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், பிரபலமான கோவிலின் படிக்கட்டுப் பாதையில் ஏராளமானோர் கூடியதைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, காவல்துறை-நிர்வாகக் குழு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடப்பாண்டில் உத்தரபிரதேசத்தில் மகா கும்பமேளா, கோவாவில் லைராய் தேவி கோயில், பெங்களூரு RCB பேரணி என அடுத்தடுத்து கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியான நிலையில், இன்று ஹரித்வாரில் துயரம் ஏற்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்