சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று அவரது தந்தை குமரி அனந்தன் போட்டோவிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். குமரி அனந்தன், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 8ம் தேதி அன்று சென்னையில் காலமானார். தமிழிசை பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர், மேலும் அவரது தந்தையின் மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி இருந்தனர். இந்த நிலையில், […]
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30 மணியளவில் சென்னை வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம், நேற்றிரவு சென்னை வந்த அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள அவர், இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் […]
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க ஆரம்பித்துவிட்டது. முன்னதாக அதிமுக தலைவர்கள் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து பேசினர். அப்போதே அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகும் என பேசப்பட்டது. அதிமுக – பாஜக கூட்டணிக்காக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை , அப்பதவியில் இருந்து மாற்றப்படுகிறார் என்றும், அவருக்கு பதிலாக புதிய தலைவரை பாஜக தேசியத் தலைமை தேர்வு செய்து வருகிறது […]
பீகார் : பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில்,பெண் ஒருவரிடம் முதல்வர் நிதிஷ்குமார் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் போது, பெண் ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொள்ள எப்படி நிற்பது எனத் தெரியாமல் தடுமாறினார். அப்போது, அந்த பெண்ணை புகைப்படம் எடுப்பதற்காக அந்த பெண்ணின் தோள் பட்டையில் கை வைத்து கேமராவை பார்த்து திரும்பமாறு கூறுகிறார். இது தொடர்பான வீடியோ சமுதாக வலைத்தளங்களில் […]
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில், தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஏற்கனவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையேயான பனிப்போர் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும் சூழலில், தற்போது அது மேலும் தீவிரமடைந்து வருகிறது. செங்கோட்டையன் தொடர்ந்து கட்சி கூட்டங்களை புறக்கணித்து வருவதும், தன்னிச்சையாக இத்தகைய பயணங்களை மேற்கொள்வதும் அதிமுகவில் உட்கட்சி பூசலை மேலும் தீவிரமாக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் […]
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மற்ற எம்எல்ஏக்கள் என பலரும் தங்கள் தொகுதிக்கான கோரிக்கைகளை கேட்டு வருகின்றனர். அதற்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இப்படியான சூழலில் நேற்று முன்தினம் திடீரென எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம் மேற்கொண்டார். முதலில் அதிமுக அலுவலகம் டெல்லியில் கட்டப்பட்டுள்ளது. அதனை காணவே நாங்கள் வந்துள்ளோம் என கூறினார். அதனை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, […]
சென்னை : டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேரில் சந்தித்தார். கூட்டணியில் இருந்து பிரிந்த அதிமுக பாஜக வரும் தேர்தலில் மீண்டும் கூட்டணியமைக்கும் என்று பேசப்படும் நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. டெல்லியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட செல்வதாக கூறிவிட்டு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணியா என்பது குறித்து இன்று காலை டெல்லி விமான […]
டெல்லி : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த அதிமுக தலைவர்கள் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளனர். முதலில் டெல்லியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட செல்வதாக கூறிவிட்டு சென்ற எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவை சந்தித்தது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இந்த சந்திப்பை அடுத்து அமித்ஷா தனது சமூக வலைதள பக்கத்தில் , 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக […]
சென்னை : தமிழக அரசியலில் மிக பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையிலேயே அவசரமாக திடீர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக முன்னால அமைச்சர்கள் சிலர் டெல்லி பயணம் மேற்கொண்டனர். அதிமுக கட்சி அலுவலகம் தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டது. அதனை காணவே எடப்பாடியார் டெல்லி சென்றார் என அதிமுகவினர் கூறி வந்தாலும், யாரும் பாஜக தலைவர்களை சந்திக்க இபிஎஸ் சென்றுள்ளார் என்ற கூற்றை முற்றிலுமாக […]
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் இன்று பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா ” மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடுகிறது என விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” தமிழகத்தில் பாஜக மட்டும் ஆட்சிக்கு வந்தது என்றால் தமிழில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை நிச்சயமாக உறுதி செய்வோம். தற்போது எங்களுடைய […]
சென்னை : இன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் பயிற்சி மையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது. அதன் பின், ராணுவ அணிவகுப்பு மரியாதையை அமித்ஷா பார்வையிட்டுவிட்டார். அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ் மொழி குறித்து சில விஷயங்களை பேசியிருக்கிறார். இது […]
சென்னை : விமான நிலையங்கள், துறைமுகங்கள், பல்வேறு தனிநபர் பிரமுகர்கள் என பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மத்திய தொழிலாக பாதுகாப்பு படையான CISF படையினரின் 56வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்தவிழாவில் பங்கேற்க ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் அமைந்துள்ள CISF மண்டல பயிற்சி மையத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வந்துள்ளார். இங்கு CISF வீரர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சைக்கிள் பயணத்தையும் தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு […]
கோவை : ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொன்டு அடுத்த நாள் காலை 6 மணி வரை தியானம் மேற்கொள்வார். அப்படி தான் இந்த முறை ஈஷா யோகா மையத்தில் நேற்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா தொடங்கி இன்று அதிகாலை 6 மணி வரை கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவே […]
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவே 8:50 மணிக்கு கோவை பீளமேடு விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அங்கு வருகை தந்த அவருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்து அவரை உற்சாகமாக வரவேற்றனர். ஈஷா […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று காலை நடைபெறவுள்ளது. தவெக 2ஆம் ஆண்டு விழாவையொட்டி தலைவர் விஜய் சிறப்பு உரை நிகழ்த்த உள்ளார். தேர்தல் வியூகம், சுற்றுப்பயணம், கூட்டணி உள்ளிட்டவை தொடர்பாக விஜய் உரையாற்ற வாய்ப்புள்ளது. மேலும், இரண்டு நாள் பயணமாக, தமிழ்நாடு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மாவட்ட அலுவலகத்தை இன்று காலை திறந்துவைக்கிறார். மேலும், கோவை […]
டெல்லி : இந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற நிலையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 1993ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்ததது. பாஜக ஆட்சி காலத்தில் சாகிப் சிங் வர்மா, மதன் லால் குரானா, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தனர். அதன்பிறகு, 27 ஆண்டுகளுக்கு பிறகு நடந்து முடிந்த தேர்தலில் 70 தொகுதிகளில் 44 தொகுதியில் பாஜக வெற்றிபெற்று டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வராக ரேகா குப்தா தேர்வு பாஜக […]
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றி 27 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதியே ரிசல்ட் வெளியாகி இருந்தாலும், இன்று வரை அம்மாநில முதலமைச்சர் யார் என்பது தெரியாமல் இருந்தது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் முடிந்த பிறகு இதற்கான ஆலோசனை இருக்கும் என கூறப்பட்டிருந்தது. அதேபோல, இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் […]
கோவை : முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக பற்றியும் , எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைவது பற்றிய கருத்துக்களுக்கும் பதில் அளித்து பேசியிருந்தார். அப்போது மத்திய அமைச்சர் அமித்ஷா உடனான முந்தைய சந்திப்பு பற்றியும் அவர்கள் கூறியது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், ” அன்றைக்கு இருந்த அரசியல் சூழலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) நானும், எடப்பாடி பழனிசாமியும் அங்கம் வகித்தோம். அப்போது கூட்டணி […]
சென்னை: இன்று (ஜனவரி 31, 2025) துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வருகை தரவுள்ளார்கள். முன்னாள் மத்திய அமைச்சரும் குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கையா நாயுடுவின் பேரன் திருமண விழா சென்னையில் நடைபெறவுள்ளது என்பதால் விழாவில் பங்கேற்க அவர்கள் வருகை தரவுள்ளார்கள். அவர்கள் சென்னைக்கு வருவவதையொட்டி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய உள்துறை […]
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது பேஷனாகிவிட்டது, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதில் கடவுள் பெயரை கூறினால் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும் என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். அமித்ஷா கருத்துக்கு பின்னர், ‘தான் கூறியதை தவறாக திரித்து பேசுகின்றனர்’ என விளக்கமும் அளித்தார். இருந்தாலும், அமித்ஷா அம்பேத்கர் பற்றி கூறிய கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என நாடு […]