மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்ட அகமதாபாத்தை சேர்ந்த சிறுமி அவரது விருப்பம் போல ஒரு நாள் கலெக்டராக இருந்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி தான் புளோரா. கடந்த 7 மாதங்களாக மூளைக் கட்டியால் அவதிப்பட்டு வந்த சிறுமி நன்றாக படிக்கக்கூடிய சிறுமி என குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில் இந்த சிறுமிக்கு கலெக்டர் ஆக வேண்டும் என ஆசை இருந்ததாக சிறுமி குறித்து மேக் எ விஷ் பவுண்டேஷன் அதிகாரிகள் கலெக்டரிடம் தெரிவித்துள்ளனர். […]