சென்னை : கால்பந்து உலகின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்தில் இவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார். தற்போது, அடுத்ததாக நேற்று ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். கால்பந்தில், 900 கோல்களை அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ரொனால்டோ. இவர் கால்பந்தைத் தாண்டி பல சமூகத் தளத்திலும் சாதனையைப் படைத்துள்ளார். சமீபத்தில் இவர் தொடங்கிய தொடங்கிய யூட்யூப் சேனலும் மிக விரைவில் அதிக சப்ஸ்க்ரைபரை பெற்று சாதனை படைத்தது. […]
சென்னை : கால்பந்து உலகில் உயரிய விருதாக கருதப்படும் பாலன் டி’ஓர் விருதுபட்டியலில் முதல் முறையாக கால்பந்து ஜாமாபாவங்களான மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதனால், அவர்களது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கால்பந்து விளையாட்டுக்கான ரசிகர்கள் உலகம் முழுவதுமே இருந்து வருகின்றனர். எந்த ஒரு கால்பந்து தொடர் நடைபெற்றாலும் அது உலகின் பெரும்பாலான நாடுகளில் மிகவும் எதிர்பார்ப்புடனே நடைபெற்று வரும். கால்பந்து போட்டிகளுக்கு எந்த அளவிற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே போல பாலன் டி’ஓர் […]
சென்னை : கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது மைல்கல் சாதனை ஒன்றைப் படைக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகம் முழுவதும் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர் ஆவார். இது வரையில் கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். தற்போது, ரொனால்டோ அடுத்ததாகப் படைக்கப் போகும் சாதனைக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். கால் பந்து உலகத்தில் அதிகமாகச் சம்பாதிக்கும் வீரரின் முக்கியமான வீரராகப் பார்க்கப்படுவர் தான் […]
சென்னை : கால்பந்து ஜமாபவனான ரொனால்டோ தனது யூட்யூப் சேனல் மூலம் தற்போது வரை சில நூறு மில்லியனுக்கும் அதிகமாக சம்மதித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கால்பந்து விளையாட்டில் மட்டுமல்லாது சமூகவலை தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒரு செலிபிரிட்டியாக இருப்பவர் தான் ‘கிறிஸ்டியானோ ரொனால்டோ’. இவர் 2 நாட்களுக்கு முன்பு புதிதாக “UR Ronaldo” என்ற ஒரு யூட்யூப் சேனலை தொடங்கினார். அவர் தொடங்கிய சில நிமிடங்களில் சுமார் 2.78 மில்லியன் யூடியூப் பயனர்கள் அவரது […]
சென்னை : கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்து வரும் ரொனால்டோ தற்போது டிஜிட்டல் உலகிலும் புதிய சாதனையை படைத்துள்ளார்.ரோனல் உலகில் முக்கிய மற்றும் மிகப் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவர் தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இவர் பல முன்னணி கிளப்பிற்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் சவுதி அரேபியா கால்பந்து லீகில் அல் நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். சோசியல் மீடியாவில் எப்போதுமே தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்ளும் விளையாட்டு வீரர்களுள் ஒருவர் […]
சென்னை : இன்றைய நாளின் (19-08-2024) முக்கிய விளையாட்டு செய்திகளில், ரஞ்சி கோப்பை தொடரில் ஷமி விளையாடவுள்ளார் எனும் தகவல் முதல் சவூதி கால்பந்து தொடரில் ரொனல்டோ அணியின் தோல்வி வரை உள்ள சூடான முக்கிய சினிமா செய்திகளைப் பார்க்கலாம். ரஞ்சி கோப்பை தொடரில் முகமது ஷமி..! கடந்த 2023-ம் ஆண்டில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், இடைப்பட்ட நிலையில் எந்த ஒரு கிரிக்கெட் தொடரையும் அவர் விளையாடவில்லை. தற்போது அந்த காயத்திலிருந்து மீண்டு வந்து பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதனால், இவர் வரவிருக்கும் […]
சென்னை : இன்றைய நாளில் முக்கிய விளையாட்டு செய்திகளில், நீரஜ் சோப்ரா – மனு பாக்கர் திருமணம் சர்ச்சை முதல் அல் நாசர் அணிக்காக ரொனால்டோ செய்யும் பயிற்சி வரை உள்ள நிகழ்வுகளை பார்க்கலாம். நீரஜ் சோப்ரா, மனு பாக்கர் திருமணம் உண்மையா.? நடைபெற்று வந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்களை வென்றவர்கள் தான் நீரஜ் சோப்ராவும், மனு பாக்கரும். இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இது […]
ரியாத் 2024 கிளப் போட்டி நேற்றுடன் முடிவடைந்து உள்ளது. நேற்று நடந்த கிளப்பின் இறுதி போட்டியில் அல்-ஹிலால் மற்றும் அல்-நாசர் அணியை எதிர்கொண்டது. இதில் அல்-நாசர் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் அல் -ஹிலால் அணி வெற்றி பெற்றது. #IPL2024 :சென்னை அணிக்கு புதிய ஸ்பான்சர் யார் தெரியுமா..? அதிகாரபூர்வ ஜெர்சி வெளியானது..! இந்த ஆட்டம் தொடங்கும் முன் மைதானம் திடீரென இருட்டாக மாறியது, 5 நொடி அமைதிக்கு பிறகு மாஸாக எண்ட்ரி கொடுத்து அனைவரையும் […]
ரொனால்டோ, சவுதி அரேபிய கிளப் அல்-நஸ்ரில் ரூ.4,400 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது முந்தைய கிளப்பான மான்செஸ்டர் கிளப் அணியுடன் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்ட பிறகு சவுதி அரேபியாவின் அல்-நஸ்ர் கிளப் தங்கள் கிளப் அணியில் இணையுமாறு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் கசிந்தது. தற்போது அந்த தகவல் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டது. ரொனால்டோ, சவுதி அரேபிய கிளப் அல்-நஸ்ரில் 2025ஆம் ஆண்டு வரையிலாக ரூ.4,400 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது […]
ரொனால்டோவிற்கு, ரோல்ஸ் ராய்ஸ் காரை கிறிஸ்மஸ் பரிசளித்த அவரது மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ், இன்ஸ்டாவில் பகிர்ந்த வீடியோ. கால்பந்து ரசிகர்களின் மிகவும் விருப்பமான வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இந்த வருடம் சரியாக அமையவில்லை என்றே சொல்லலாம். மான்செஸ்டர் கிளப் அணியுடனான விலகல், மேலும் உலகக்கோப்பை தொடரிலும் போர்ச்சுகல் அணியில் முக்கிய போட்டிகளில் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டார். அவருக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பை தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இன்னும் உறுதியான எந்த முடிவையும் […]
கோப்பை ஒருபோதும் சிறந்த வீரரை முடிவு செய்வதில்லை! நீங்கள் சிறந்த பிளேயர் என ரொனால்டோவை கோலி புகழ்ந்துள்ளார். கத்தாரில் நடந்து வரும் உலகக்கோப்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதியில் போர்ச்சுகல் அணி 0-1 என்ற கோல் கணக்கில் மொரோக்கோவிடம் தோல்வியடைந்து உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. மேலும் இந்த தொடர் தான் ரொனால்டோவின் கடைசி உலகக்கோப்பை தொடர் என்பதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த படி போர்ச்சுகல் அணியால் இந்த தொடரில் மேலும் நீடிக்க முடியவில்லை. ரொனால்டோ, மொரோக்கோவிற்கு எதிரான […]
ஸ்விட்சர்லாந்துக்கு எதிராக ரொனால்டோ, விளையாடாதது அணியின் ஒருவகையான யுக்தி என்று மேலாளர் சாண்டோஸ் கூறியுள்ளார். ஃபிஃபா உலகக்கோப்பையின் 16 அணிகள் மோதும் சுற்றில் நேற்று போர்ச்சுகல் மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடும் லெவனில் இடம்பெறவில்லை, இதனால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் இந்த போட்டியில் போர்ச்சுகல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்து அணியை வீழ்த்தியது. மேலும் ரொனால்டோவுக்கு பதிலாக இறங்கிய 21 வயது இளம் வீரர் […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் 16 வருடங்களுக்கு பிறகு கால் இறுதிக்கு போர்ச்சுகல் அணி, தகுதி பெற்றுள்ளது. ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடரில் போர்ச்சுகல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்து அணியை வீழ்த்தி, 16 வருடங்களுக்கு பிறகு உலகக்கோப்பையின் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையின் தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து தற்பொழுது 16 அணிகள் மோதும் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று அதிகாலை 12 30 […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் போர்ச்சுகல் அணி, 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை தோற்கடித்து நாக் வுட்டுக்கு தகுதி பெற்றது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடரின் குரூப்-H இல் இடம்பெற்ற ரொனால்டோவின் தலைமையிலான போர்ச்சுகல் மற்றும் உருகுவே அணிகள் லுஸைல் ஸ்டேடியத்தில் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதியில் தொடங்கிய சில நிமிடங்களில் போர்ச்சுகல் அணியின் ப்ருனோ பெர்னாண்டஸ் 54ஆவது நிமிடத்தில் ஒரு […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் நேற்று ரொனால்டோவின் சாதனையுடன், போர்ச்சுகல் 3-2 என்ற கோல் கணக்கில் கானாவை வீழ்த்தியது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் நேற்று கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் மற்றும் கானா அணிகள் மோதியது. இந்த போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலையில் இருந்தனர். இரண்டாவது பாதியில் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்டத்தின் 65 ஆவது நிமிடத்தில் பெனால்டி முறையில் ஒரு […]
ஃபிஃபா 2022 உலகக் கோப்பை இல் போர்ச்சுகல் மற்றும் கானா அணிகள் இன்று இரவு 9:30 மணிக்கு மோதுகின்றன. கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் குரூப்-H இல் இடம்பெற்ற ரொனால்டோவின் போர்ச்சுகல் மற்றும் கானா அணிகள் ஸ்டேடியம்-974 இல் இன்று மோதுகின்றன. மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியிலிருந்து விலகிய இருநாட்களுக்கு பிறகு ரொனால்டோ தனது போர்ச்சுகல் அணியுடன், இந்த உலகக்கோப்பையில் தனது முதல் போட்டியில் கானா அணிக்கு எதிராக இன்று விளையாடுகிறது. 37 […]
ரசிகரின் போனை தள்ளிவிட்ட ரொனால்டோவுக்கு, 50,000யூரோ அபராதமும் இரண்டு போட்டிகளில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரசிகரின் போனை கீழே தள்ளிவிட்டதற்காக, கால்பந்து கூட்டமைப்பு அவருக்கு 50,000 யூரோ(இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.42 லட்சத்து 50 ஆயிரம்) அபராதமும், இரண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட தடையும் விதித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஒழுங்கற்ற முறையில் ஈடுபட்டதாகக்கூறி மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணி, ரொனால்டோவுடனான ஒப்பந்தத்தை சமீபத்தில் முடித்துள்ளது. […]
ரொனால்டோ மான்செஸ்டர் யுனைட்டட் கிளப் அணியிலிருந்து தன் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு விலகியுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மான்செஸ்டர் யுனைட்டட் கிளப் அணியிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ரொனால்டோ விலகியுள்ளார். ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் குறித்து ஒரு நேர்காணலில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து தற்போது பரஸ்பர உடன்பாடு மூலம் வெளியேறினார். இது குறித்து ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேற உள்ளார். ஓல்ட் ட்ராஃபோர்டில் 346 போட்டிகளில் […]