உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுடன் அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பேட்மிட்டன் விளையாடினார். உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு அம்மாநில அரசு சார்பாக விளையாட்டு போட்டிகள், அம்மாநில தலைநகரான டேராடூனில் நடத்தப்படுகிறது. அதில் இன்று நடைபெற்ற பேட்மிட்டன் மற்றும் வாக்கத்தான் போட்டிகளை அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தொடங்கி வைத்தார். அதில் பேட்மிட்டன் போட்டியில் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் முதல்வரும், கொரோனாவில் இருந்து மீண்ட ஒரு நபரும் விளையாட, மறுபுறத்தில் செயலாளர் […]