சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் நாடு முழுவதும் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய பாஜக அரசு முயல்கிறது என்றும், இதன் மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் என்றும், தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனை பொருட்டு தமிழக அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தினர். மேலும், கடந்த மார்ச் 22ஆம் தேதியன்று மக்கள் தொகை […]
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதனால், திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தொகுதி மறுவரையறை குறித்து வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட் அணிந்து கொண்டு சென்றனர். மக்களவையில் இதுகுறித்து விவாதம் நடத்த தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், தொடர் அமளி […]
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி, மக்களவை ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினார். தொகுதி மறுசீரமைப்பு குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால், திமுகவின் கோரிக்கையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்க மறுத்துவிட்டார். இதனால் திமுக எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், […]
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி மறுவரையறையால் மக்கள் தொகை குறைவாக உள்ள மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என திமுக தொடர்ந்து மத்திய பாஜக அரசை குற்றம்சாட்டி வருகிறது. தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டில் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது என பாஜக கூறியதே தவிர தொகுதி மறுசீரமைப்பு நடைபெறாது என அவர்கள் கூறவில்லை. இப்படியான சூழலில் ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு […]
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி வைத்தும் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு நாகை மாவட்ட செயலாளர் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் பங்கேற்றார். நாகை மாவட்டம் புத்தூரில், திமுக மாவட்ட செயலாளரும், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவருமான ந.கௌதமன் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினாா். […]