தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு 3510 வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏற்கனவே இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில், தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள, திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க 5,000 முகாம் வாழ் பயிற்சியளிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், சிறு, குறு […]
தேசிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றுகிறார். தேசிய கல்வி கொள்கை கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், மாணவர்களுடன் இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று மாலை 4.30 மணியளவில் உரையாட உள்ளார். இந்த உரையாடலில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த […]
தேசிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார். தேசிய கல்வி கொள்கை கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், மாணவர்களுடன் இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பிரதமர் மோடி காணொலி வாயிலாக நாளை மாலை 4.30 மணியளவில் உரையாட உள்ளார்.இந்த உரையாடலில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் […]
கல்வி கண் திறந்த இந்தியாவின் கருப்பு வைரம் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் வரலாற்றில் இன்று. ஜூலை 15-ஆம் தேதி 1903 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் சிவகாமி மற்றும் குமாரசாமி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர் தான் இந்தியாவின் கருப்பு வைரம் காமராஜர். ஆறு வயதிலேயே தனது தந்தையை இழந்த இவர், அதன் பின்பதாக தனது தாயுடன் வளர்ந்து வந்துள்ளார். படிக்காத மேதை, தென்னாட்டு காந்தி, பெருந்தலைவர், கருப்பு காந்தி, கருப்பு வைரம் என்றெல்லாம் இவர் அன்புடன் […]
கல்விக்கென தனி வானொலி தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒளி உமிழும் திரையைத் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டும். ஹெட்செட்டுகளை நெடுநேரம் காதில் மாட்டிக்கொண்டும் இருப்பதால் மாணவர்களின் கண்பார்வை, செவி கேட்கும் திறனில் பிரச்னை ஏற்படுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். தலைவலி, கண் எரிச்சல், கண்களைச் சுற்றி கருவட்டம், சரியான தூக்கமின்மை போன்ற ஆன்லைன் வகுப்புகளின் விளைவுகளை எல்லா குடும்பங்களும் […]
டெல்லியில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவிப்பு. கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி டெல்லி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக ஏப்ரல் 12 ம் தேதி டெல்லி அரசு 9 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகளை […]
+1 வகுப்புகளை ஜூன் 3-வது வாரத்தில் தொடங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வந்த நிலையில், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது, இதையடுத்து தமிழக அரசு ஊரடங்கை பிரப்பித்து அதன் தொற்று பரவலை படிப்படியாக குறைத்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு […]
AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல புதிய பிஜி படிப்புகள் தொடக்கம்.இந்திய பொறியியல் பணியாளர்கள் கல்லூரி அறிவிப்பு. இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் இந்தியா இன் ஒரு அங்கமான இன்ஜினியரிங் ஸ்டாஃப் காலேஜ் ஆப் இந்தியா, ஏ.ஐ.சி.டி.இ அங்கீகரித்த பல புதிய பி.ஜி படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் சிவில், பவர், டெலிகாம், போக்குவரத்து, நிதி, எச்.ஆர்.எம், மார்க்கெட்டிங், பிசினஸ் அனலிட்டிக்ஸ் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஏ.ஐ.சி.டி.இ ஆல் அங்கீகரிக்கப்பட்ட 2 ஆண்டு முழுநேர பிஜிடிஎம் படிப்புகளை தொடங்கியுள்ளது. அதில்vபிஜிடிஎம் உள்கட்டமைப்பு, […]
பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்ததான அறிக்கை நாளை மறுநாள் முதல்வரிடம் தரப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களின் படிப்பு மற்றும் பாடத் திட்டங்கள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்ததான அறிக்கை நாளை மறுநாள் முதல்வரிடம் கொடுக்கப்படும் எனவும், மேலும் அறிக்கை கொடுக்கப்பட்ட 5 நாளிலேயே பாடத் […]
நாடு முழுவதும் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய கல்வி கொள்கை தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு இன்று(செப்.,24) கருத்து கேட்கிறது. மத்திய அரசு நாடு முழுவதும் புதிய தேசிய கல்வி கொள்கை தயாரித்து அமல்படுத்த உள்ளது. தமிழகத்தில், இதை அமல்படுத்துவது குறித்து, அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்களிடம், பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்க, உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வி துறை சார்பில், தனித்தனியே நிபுணர் […]
நவ.,1 முதல் கல்லுாரிகளை திறக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், வாரத்தில் ஆறு நாட்கள் கல்லுாரியை நடத்தவும்,குளிர் மற்றும் கோடை கால விடுமுறை நாட்களை ரத்து செய்யவும் பரிந்துரைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மார்ச் 25 ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கு முன்பே நாடு முழுதும், மார்ச், 16ம் தேதி முதல், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டது. இதன்பின் பல தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றது. கொரோனா பரவலால், நடப்பு கல்வியாண்டில் திட்டமிட்டபடி, […]
அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஆன்லைன் வழியாக வகுப்புகள் 3-ந்தேதி அதாவது நாளை தொடங்கப்பட வேண்டும். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், தற்போது ஆறாம் கட்ட ஊரடங்கு நேற்று தொடங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாணவர்களின் கல்வியாண்டு பாதிக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகளை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. […]
“நடப்பாண்டு ஐ.ஐ.டி கள் சேர்க்கைக்கான தகுதிகளில் விதிகள் தளர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது” . பல வாரியங்களால் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் ஓரளவு ரத்து செய்யப்பட்டதால், இந்த முறை ஜே.இ.இ (மேம்பட்ட) 2020 தகுதி வாய்ந்த மாணவர்களுக்கான தகுதி அளவுகோலை தளர்த்த கூட்டு சேர்க்கை வாரியம் (ஜேஏபி) முடிவு செய்துள்ளது. மேலும் இந்த ஆண்டு மட்டும் ஐ.ஐ.டி. மற்றும் பி.டெக் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கான தகுதி அளவுகோலை அவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியை அடிப்படையாக வைத்தே இருக்கும் […]
கொரோனா வைரஸுக்குப் பிறகு 10 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மாட்டார்கள். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், அனைத்து கல்வி மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து தி சேவ் தி சில்ட்ரன் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, கொரோனா வைரஸ் தொற்று ஒரு “முன்னோடியில்லாத கல்வி அவசரநிலையை” ஏற்படுத்தியுள்ளது. இதனால், 9.7 மில்லியன் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பள்ளிகள் திறக்கும் போது, அவர்கள் மீண்டும் பள்ளிக்கு […]
கொரோனா ஊரடங்கு இருக்கும் சூழ்நிலையை கருத்தில்கொண்டு, 2019-20-ம் கல்வியாண்டின் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவது , கல்லூரிகள் திறப்பு எப்போது? என்பது குறித்தும் ஏற்கனவே ஆலோசித்து அட்டவணைகளை வெளியிடப்பட்டது. அதன்பின்னரும் தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து நீடிப்பதால், இதுகுறித்து மேலும் ஆலோசித்து முடிவு எடுக்க பரிந்துரை அளிக்க பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் அரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குகாத் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு அளித்துள்ள பரிந்துரை படி, ‘இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் […]
10-ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.மேலும் 11-ஆம் வகுப்புக்கு நடத்தப்படாமல் இருந்த பொதுத்தேர்வும் கைவிடப்படுவதாக அரசு அறிவித்தது. இதனோடு மட்டுமின்றி பொதுத்தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களும் தாங்கள் பெற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் எனவும் அரசு அறிவித்தது. […]
நாடுமுழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் சீரான கல்வியை வழங்க ஒரே நாடு ஒரே கல்வி வாரியம் என்கிற அமைப்பை நிறுவ மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி வழக்கறிஞரும்,பாஜக தலைவருமான அஸ்வினிகுமார் உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவின் விவரம்: நாடு முழுவதும் 6- 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பொது பாடத்திட்டங்கள் மற்றும் பாடங்கள் கொண்ட சீரான கல்வியை வழங்க வேண்டும். இதற்காக […]
கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணம் வசூலிப்பதில் நிர்பந்திக்க கூடாது எனயுஜிசி அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த அனைத்து இடங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸின் தீவிர பரவலானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், உயர்கல்வி நிறுவனங்கள், கல்விக் கட்டணத்தை செலுத்தக்கோரி மாணவர்கள், பெற்றோர்களை வற்புறுத்துவதாக புகார் எழுந்த நிலையில், கல்வி நிறுவனங்கள், மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை வசூலிப்பதில் […]
வருகின்ற 21-ஆம் தேதிக்குள் வெளி மாவட்டங்களுக்கு சென்று தங்கியுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துகல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது.இதனிடையே தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர்,தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு ஜூன் 1ம் தேதி […]
மருத்துவம் மற்றும் இஞ்சினியரிங் படிக்கும் மாணவர்களுக்கான Neet மற்றும் Jee நுழைவு தேர்வுக்கான புதிய தேதி இன்று (மே 5) அறிவிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியாஸ் கூறியுள்ளார். இவர் இணையத்தில் நேர்காணல் மூலம் மாணவர்களிடம் உரையாட போவதாகவும் கூறியுள்ளார்.