சென்னை :எறும்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருத்தலம் அமைந்துள்ள இடம்; திருச்சியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு காலை 6மணியிலிருந்து 12 மணி வரையிலும் மாலை 4 மணியிலிருந்து 8:30 மணி வரையிலும் நடை திறக்கப்பட்டிருக்கும். மிகச்சிறிய உயிரினங்களான எறும்புகள் வணங்குவதற்காக மண்புற்று வடிவில் தன்னை சிவபெருமான் மாற்றிக்கொண்ட சிறப்புமிக்க ஸ்தலமாக விளங்குகின்றது . முற்றிலும் கற்களால் ஆன […]