ஜூலையில் ரூ.1,48,995 கோடி மொத்த ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது என்று மத்திய நிதியமைச்சகம் தகவல். நாட்டில் ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் சுமார் ரூ.1.49 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ப்போதும் இல்லாத அளவுக்கு வசூலிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச வருவாய் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாத ஜிஎஸ்டி வருவாயை விட ஜூலை மாத வருவாய் 28% அதிகம். இதுவரை பதிவு […]
மதுரையில் அடுத்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் இன்று ஆலோசனை. மதுரையில் அடுத்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளதை முன்னிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். நிதியமைச்சர், நிதித்துறை அதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். கொரோனாவில் இருந்து குணமடைந்த முதல்வர் சில நாட்கள் பின் இன்று தலைமை செயலகம் சென்றுள்ளார். இதனிடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் […]
உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்தி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை. விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை மாவு, பருப்பு வகைகள், பால், தயிர், மோர், லஸ்ஸி, ஆகியவற்றுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலை ரூ.2 முதல் ரூ.3 வரை உயர்ந்துள்ளது. மேலும் ரூ.1,000 மதிப்புள்ள ஹோட்டல் அறைகளுக்கு 12 சதவீதமும், சோலார் வாட்டர் ஹீட்டர்களுக்கு 5 […]
ஆவின் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு. ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. உணவுப்பொருட்கள் மீது 5% ஜிஎஸ்டி வரி விதிப்பால் தயிர், மோர், லஸ்ஸி, நெய் உள்ளிட்டவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. தற்போது இருந்து வரும் விலையைவிட சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் நெய்க்கு ரூ.50 , ஒரு லிட்டர் தயிருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது என பால் முகவர்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. 200 கிராம் தயிர் […]
உணவுப்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என ஈபிஸ் கோரிக்கை. உணவுப்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட GST வரி உயர்வினை உடனடியாக மத்திய அரசு திருமபி பெற வேண்டும். உணவுப்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதித்து ஏழை, எளிய […]
சில்லறையில் விற்கப்படும் அரிசி, கோதுமை, கம்பு, கோதுமை மாவு, ரவை, பருப்பு வகைகள் எந்த ஜிஎஸ்டியையும் ஈர்க்காது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் அதன் 47வது கூட்டத்தில் கோதுமை, அரிசி, மக்காச்சோளம், மக்கானா, குறிப்பிட்ட மாவுகள் போன்ற குறிப்பிட்ட முன் பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. பொருட்கள், தளர்வாக விற்கப்படும் போது, […]
புதிய ஜி.எஸ்.டி வரி அமல்படுத்துதல் காரணமாக முக்க்கிய பொருட்களின் விலை இன்று முதல் ஏற்றம் கண்டுள்ளது. இன்று முதல் நுகர்வோர் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு காரணமாக விலை உயர்ந்துள்ளது. முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், மருத்துவமனை அறைகள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் இன்று முதல் அதிகரிக்கப்பட உள்ளன. கடந்த மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கூட்டத்தில், ஏராளமான பொருட்கள் மற்றும் […]
மத்திய அரசு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கொள்கையின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் மீது பெரும் யுத்தத்தையே தொடுத்து வருகிறது என கே.பாலகிருஷ்ணன் அறிக்கை. மத்திய அரசு அரிசி மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து கே.பாலகிருஷ்னன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தனது மோசமான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கொள்கையின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் மீது பெரும் யுத்தத்தையே தொடுத்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு […]
உணவகங்கள் தனியாக சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவு. நாடு முழுவதும் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் தானாக சேவைக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.தங்கும் விடுதிகள்,உணவகங்கள் சேவைக் கட்டணம் விதிப்பது தொடர்பாக மத்திய நுகர்வோர் அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதன்படி, எந்தவொரு தங்கும் விடுதியும் அல்லது உணவகங்களும் தானாக வாடிக்கையாளரின் பில்லில் சேவைக் கட்டணத்தை சேர்க்க கூடாது. வேறு எந்தப் பெயரிலும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படக் […]
ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் வைத்து மதுரையில் கூட்டம் நடைபெறும் என நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் வைத்து மதுரையில் கூட்டம் நடைபெறும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்த நிலையில் அவருடைய அழைப்பை […]
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரிகள் உடனடியாக திரும்ப பெறப்பட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல். உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரிகள் உடனடியாக திரும்ப பெறப்பட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் எடுத்துள்ள முடிவு. ஏழை எளிய. நடுத்தர மக்கள் மீது பெரும் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. விதி விலக்குகளை நீக்குதல் (Removal of exemptions) என்ற பெயரில் அன்றாடம் […]
நிர்மலா சீதாராமன் அவர்கள், ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் வைத்து மதுரையில் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் சண்டிகரில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டமானது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி அதிகரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.இக்கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி,மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கூட்டம் நாளையும் நடைபெற உள்ள நிலையில்,இதில்,பெட்ரோல் மற்றும் டீசல் வரியை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவது குறித்தும், வருவாய் […]
2021 மே மாதத்தை விட தற்போது 44% ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல். ஜிஎஸ்டி வருவாய் கடந்த மே மாதத்தில் ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடுகள் ரூ.86,912 கோடியை மாநில அரசுகளுக்கு நேற்று விடுத்திருந்தது. மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட ரூ.86,912 கோடியில், ரூ.47,617 கோடி மதிப்பிலான இழப்பீடு […]
மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடுகள் ரூ.86,912 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. “மாநிலங்களின் வளங்களை நிர்வகிப்பதற்கும், அவர்களின் திட்டங்கள் குறிப்பாக மூலதனச் செலவுகள் நிதியாண்டில் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று மத்திய அரசு மே 31 அன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு நிதியில் சுமார் ரூ.25,000 கோடி மட்டுமே இருந்த போதிலும், முழுத் தொகையையும் மத்திய அரசு […]
வரி விதிக்கும் மாநில அரசின் அதிகாரத்தை மீறி ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என அமைச்சர் தகவல். ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியிருந்தது. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மற்றும் அறிவுரைகள்தான் வழங்க வேண்டுமே தவிர இதை கட்டாயம் செய்யுங்கள் என்று எந்தவொரு அரசுகளுக்கும் உத்தரவிடமுடியாது என்றும் ஜிஎஸ்டி தொடர்பான விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சட்டப்பிரிவு […]
இந்தியாவில் கேசினோக்கள்,ஆன்லைன் விளையாட்டுக்கள் மற்றும் ஜிஎஸ்டியை விதிக்கும் குதிரை பந்தயம் ஆகிய விளையாட்டுக்களின் சேவைகளை சிறந்த மதிப்பீடு செய்வதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில்,ஆன்லைன் விளையாட்டுக்கள்,குதிரைப் பந்தயம் மற்றும் கேசினோ போன்ற விளையாட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 18% இருந்து 28% ஆக உயர்த்த மத்திய அரசுக்கு அமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) பரிந்துரைத்துள்ளது. இன்றும் ஓரிரு நாட்களில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில்,ஆன்லைன் விளையாட்டுக்கள்,ரேஸ் மற்றும் […]
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் கடந்த மார்ச் 29,2017 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2017 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது.இதனைத் தொடர்ந்து,ஒவ்வொரு மாதமும் வசூலான ஜிஎஸ்டி வருவாய் நிலவரம் குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்து வருகிறது. இந்நிலையில்,கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக ரூ.1.68 லட்சம் கோடியாக வசூலிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வசூல் கடந்த மார்ச் மாதம் […]
அன்றாட சாப்பிட தேவைப்படும் சமையல் பொருட்களான அத்தியாவசியப் பொருட்கள் உட்பட 143 பொருட்களின் சரக்கு & சேவை வரியை 18%-லிருந்து 28% ஆக உயர்த்துவதற்கான மாநிலங்களின் கருத்துக்களை மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,143 பொருட்களில் அப்பளம்,வெல்லம்,பவர் பேங்க்கள், கைக்கடிகாரங்கள்,சூட்கேஸ்கள்,கைப்பைகள்,வாசனை திரவியங்கள்,கலர் டிவி செட்கள் (32 அங்குலத்திற்கு கீழே), சாக்லேட்டுகள்,சூயிங்கம்,வால்நட்,கஸ்டர்ட் பவுடர், மது அல்லாத பானங்கள்,பீங்கான் மூழ்கிகள்,பாத்திரம் கழுவும் தொட்டிகள், கண்ணாடிகள்,கண்ணாடிகளுக்கான பிரேம்கள் மற்றும் ஆடைகள் மற்றும் அணிகலன்கள் ஆகியவை அடங்கும். 2017 ஆம் ஆண்டு […]
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல். டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழ்நாட்டு முக்குதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று மத்திய நிதியமைச்சகத்தில் சந்தித்திருந்தார், இந்த சந்திப்பின் போது, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி நிலவை தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.20,860.40 கோடி நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும் […]