#GSTCollection:முதல் முறையாக ரூ.1.68 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Default Image

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் கடந்த மார்ச் 29,2017 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2017 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது.இதனைத் தொடர்ந்து,ஒவ்வொரு மாதமும் வசூலான ஜிஎஸ்டி வருவாய் நிலவரம் குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில்,கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக ரூ.1.68 லட்சம் கோடியாக வசூலிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வசூல் கடந்த மார்ச் மாதம் ரூ.1,42,095 கோடியாக இருந்த நிலையில்,இதுவரை இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் ரூ. 25,000 கோடி ஜிஎஸ்டி வசூல் உயர்ந்துள்ளது எனவும்,மேலும் சரக்கு இறக்குமதியின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 30% உயர்ந்துள்ளது எனவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே சமயம்,மாநிலங்களுக்கு ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி வசூல்,மார்ச் மாத வசூலை விட கடந்த ஏப்ரல் மாதத்தில் 13.08% அதிகரித்து ரூ.10,649 கோடியை எட்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:”ஏப்ரல் 2022க்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.68 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்