ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் கவர்னராக நரசிம்மன் இருந்து வந்தார்.தற்போது நரசிம்மனுக்கு பதிலாக ஆந்திர கவர்னராக ஒடிசா மாநிலத்தை சார்ந்த பாஜக தலைவர் ஹரிசந்தன் நியமிக்கப்பட்டு உள்ளார். சத்தீஷ்கர் மாநில கவர்னர் பொறுப்பை மத்திய பிரதேச கவர்னர் ஆனந்திபென் கூடுதலாக கவனித்து வந்தார்.தற்போது சத்தீஷ்கர் மாநில கவர்னராக மத்திய பிரதேச பாஜக தலைவர் அனுசுயா உகே நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார்.