தற்போது எதற்க்கெடுத்தாலும் ஆதார் காட்டாயம் தான்.அது நமது போன் சிம் கார்ட் வாங்குவதில் இருந்து, கடன், சொத்து, வேலை, பான் எண்ணிற்கு பதிலாகவும் ஆதாரை இணைத்து கொள்ளலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் சில இடங்களில் ஆதார் எண்ணை தவறாக குறிப்பிட்டதால் சில சிக்கல்கள் வருவதால், இனி ஆதார் எண்ணை தவறாக குறிப்பிட்டால் 10 ஆயிரம்அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 1 முதல் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.