இந்தியாவில் நீதித்துறை சிறப்பாக இல்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர்களுக்கு சட்டப் புத்தகம் வழங்கும் விழா,சென்னை உயர்நீமன்றதில் உள்ள பார் கவுன்சிலில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து,விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி:”வழக்கறிஞர்களின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும்.திமுக ஆட்சிக்கு வருகிறபோது எல்லாம் நாங்கள் மறப்பது இல்லை.ஏனெனில்,நங்கள் எதிர்கட்சியாக இருந்தபோது உறுதுணையாக இருந்தவர்கள் வழக்கறிஞர்கள்தான்”,என்றும் மாநில […]