கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக உள்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், எங்கள் வீட்டில் வேலை செய்யும் சிறுவனுக்கு நேற்று கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நான் பரிசோதிக்கப்பட்டேன், அதில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன், அறிகுறிகள் எதுவும் இல்லை, ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். சமீபத்தில் என்னுடன் நேரடி தொடர்பு கொண்டவர்கள் உடனடியாக சோதனை செய்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் […]