நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில், தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி, இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு எதிராக மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தப் போட்டியில், 41 வயதான ஏபி டி வில்லியர்ஸ், “மிஸ்டர் 360°” என்ற பெயருக்கு ஏற்ப, தனது இளமை திரும்பியது போல விளையாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். முதலில் பேட்டிங் செய்த அவர், 30 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் […]