விருதுநகர் 28-வது வார்டில் குடிநீர் பிரச்னை உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். விருதுநகர் 28-வது வார்டில் டி.சி.கே பெரியசாமி தெரு, சோனை கருப்பன் தெரு, வாடியான் தெரு, சின்னையாபள்ளிக்கூட தெரு, பெரிய காளியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட தெருக்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் நீர் வசதி இல்லாததால் பக்கத்து தெருக்களுக்கு செல்கின்றனர். சாக்கடைகள் குறுகலாகவும், ஆழப்படுத்தாமலும் உள்ளது. இப்பகுதி மக்களுக்கு நுாலகம், சிறுவர் பூங்கா தேவையாக உள்ளது. பாதாளசாக்கடை தொட்டி மூடிகள் தரமின்றி உள்ளதால் உடைக்கின்றன. சாக்கடையை […]
சென்னை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு போட்டியிட திமுக சார்பில் பட்டியலினத்தை சேர்ந்த 16 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.இதனையடுத்து,பிப்.22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. […]
நேதாஜி, அம்பேத்கர், காமராஜர், அறிஞர் அண்ணா போன்று வேடம் அணிந்த கலைஞர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிட பிரபல கானா பாடகர் கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் 6-ஆவது மண்டலம், 72-ஆவது வார்டில் சுயேட்சையாக போட்டியிட கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே கடந்த 2006 மற்றும் 2011 தேர்தல்களில் போட்டியிட்டு இரண்டாவது இடம் பிடித்திருந்த நிலையில், தற்போது 3-வது முறையாக அதே வார்டில் போட்டியிட கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆலோசனை. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள் மற்றும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது […]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் 9ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 9-ஆவது கட்ட பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. கடையநல்லூர், புளியங்குடி, செங்கோட்டை ஆகிய நகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மதுரை, தென்காசி, கோவை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் திமுக வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, மாவட்ட வாரியாக கழகத்தின் சார்பாக போட்டியிடும் மாநகராட்சி – நகராட்சி – பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வேட்பாளர்களின் பட்டியல் இதுவரை […]
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் 6 வார்டுகள் ஒதுக்கீடு. சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உரிய இடஒதுக்கீடு கோரி கூட்டணி கட்சிகள், முதன்மை கட்சியான திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், அவற்றில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் 6 வார்டுகள் ஒதுக்கீடு […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 6-ஆம் கட்ட திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 6ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, செஞ்சி, அனந்தபுரம், மரக்காணம்,ஒரத்தநாடு, வல்லம், திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி, திருக்காட்டுப்பள்ளி, மங்கலம்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம், தொரப்பாடி மற்றும் பெண்ணாடம் ஆகிய பேரூரராட்சிகளுக்கு திமுகவின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம், விருத்தாச்சலம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, அறந்தாங்கி ஆகிய நகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக. மீதமுள்ள மாவட்டங்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் […]
ராணிப்பேட்டை மாவட்டதிலுள்ள 8 பேரூராட்களில் போடியிடும் வேட்பாளர்கள் பெயரை வெளியிட்டது அதிமுக. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 பேரூராட்சிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக, இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என கூறப்பட்ட நிலையில், […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக அதிமுக – பாஜக இடையே மூன்றரை மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை நிறைவு. தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாஜக நிர்வாகிகளுடன், மாநில தலைவர் அண்ணாமலை இரு தினங்களாக சென்னை கமலாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து அதிமுக மற்றும் பாஜக இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பாஜகவுக்கு அதிக […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பார்வையாளர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 33 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் 20 மாவட்ட வருவாய் அலுவலர்கள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையமும், தமிழக […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களை கேட்போம் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் இடப்பங்கீடு குறித்து தீவிரம் காட்டி வருகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதற்கிடையில், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது இடப்பங்கீடு குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் அரசு சார்பில் புதிய திட்டங்கள் அறிவிக்க முடியாது என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் எனவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்தார். இதன்பின் பேசிய அவர், சென்னைக்கு மட்டும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்படும் […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவிப்பு. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கான வைப்பு தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. […]
உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் நாளை மற்றும் 9-ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், நாளை மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள 9 மாவட்ட […]
முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் 5 மணியுடன் நிறைவு பெற்றது. தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், வேட்பாளர்கள் கொட்டும் மழையையும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனையடுத்து, முதற்கட்ட ஊரக […]
உள்ளாட்சி தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்களை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை […]
தேமுதிக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் அமமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2021 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்து போட்டியிடுகிறது. போட்டியிட விரும்புகின்ற […]
உள்ளாட்சி அமைப்புகளின் இடங்கள் குறித்து கூட்டணி கட்சியினருடன் கலந்து பேசி, சுமூக முடிவு செய்திட வேண்டுமென திமுக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார். இந்த உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று […]