BREAKING: திமுகவின் 9-ஆவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Release of the list of 9th phase candidates of DMK contesting in the urban local body elections

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் 9ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 9-ஆவது கட்ட பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. கடையநல்லூர், புளியங்குடி, செங்கோட்டை ஆகிய நகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மதுரை, தென்காசி, கோவை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் திமுக வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, மாவட்ட வாரியாக கழகத்தின் சார்பாக போட்டியிடும் மாநகராட்சி – நகராட்சி – பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வேட்பாளர்களின் பட்டியல் இதுவரை 8 கட்டங்களாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது 9ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் திமுக வெளியிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் திமுக 164 வார்டுகளில் போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, காங்கிரஸ் 17, விசிக 6, மார்க்சிஸ்ட் 5 இடங்களில் போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது. மதிமுக 3, சிபிஐ 2, ஐயுஎம்எல் மற்றும் மமகவுக்கு தலா 1 என சென்னையில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக 35 வர்டுகளை ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சென்னை மாநகராட்சிக்கான திமுக வேட்பாளர்களின் முழு பட்டியல் இதுவரை வெளியாகவில்லை. அதுவும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.