வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டு நாடித்துடிப்பு குறைந்த நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி, சிலுவம்பாளையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்னையிலிருந்து தனது காரில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு புறப்பட்டு சென்றார். இந்நிலையில் பாதி வழியிலேயே அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு (72) நேற்று காலை 10.45 மணியளவில் திடீரென மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி […]