தாயின் அன்புக்கு ஈடாய் இந்த உலகில், வேறெந்த அன்பும் இல்லை. பூமி நம்மை தங்குவதற்கு முன்னே, நம்மை கருவில் சுமந்து பெற்றேடுத்த அன்னைக்கு இந்த உலகில் நாம் எதை கொடுத்தாலும் ஈடாகாது. அன்பு என்ற வார்த்தைக்கு முழுமையான அர்த்தம் அனைத்தும் மறைந்திருக்கும் ஒரு இடம் ‘அம்மா’ தான். இந்த உலகில் நாம் எவ்வளவு அன்பான உறவுகளை தேடி சென்றாலும், நமது இதயத்தில் நம்மை கருவில் சுமந்த அம்மாவின் அன்புக்காக ஏங்கும் ஏக்கம் இருந்துக் கொண்டே தான் இருக்கும். […]