மிசோரமின் ஐஸ்வால் தெற்கு-III தொகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி நாளை முல்லுங்து வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். மிசோரமில் நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. மொத்தமுள்ள 8.57 லட்சம் வாக்காளர்களில் 80 சதவீதம் பேர் வாக்களித்தனர். 1,276 […]