பாஜகவின் தேசிய துணை தலைவரான முகுல் ராய் மற்றும் அவரது மகன் சுப்ரான்ஷூ ஆகிய இருவரும்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில்,மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும்,கட்சியின் மூத்த தலைவரான முகுல் ராய்க்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதை அடுத்து,கடந்த 2017 ஆம் ஆண்டு மேற்கு வங்க எம்.பி.பதவியை முகுல் ராய் ராஜினாமா செய்தார். இதனையடுத்து,பாஜகவில் இணைந்த முகுல் ராய்,அக்கட்சியின் தேசிய துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து,கடந்த […]