மும்பை வான்கடே மைதானத்தை கொரோனா வார்டாக மாற்ற அனுமதி கேட்டு மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு மும்பை மாநகராட்சி நிர்வாகம் அனுமதி கடிதம் அனுப்பியுள்ளது. இந்தியாவிலேயே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மாறியுள்ளது மகாராஷ்டிரா மாநிலம். இம்மாநிலத்தில், மக்கள் அதிகமாக உள்ள மும்பை நகரில் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே வருகிறது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை சமாளிக்க மும்பை வான்கடே மைதானத்தை கொரோனா வார்டாக மாற்ற மாநகராட்சி […]