நிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் 1200 தேசிய மீட்பு படைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது, நிவர் புயலானது இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நிவர் புயல் கரையை கடக்கும்போது வெள்ளம் அல்லது நிலச்சரிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 1,200 தேசிய பேரிடர் மறுமொழிப் படை (என்.டி.ஆர்.எஃப்) மீட்புப் பணியாளர்கள் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் நிறுத்தப்பட்டுள்ளனர். […]