சென்னை, பூந்தமல்லி அடுத்த குமனஞ்சாவடி, கண்டோன்ட்மென்ட் பகுதியை சேர்ந்தவர், தமீம் அன்சாரி. இவருக்கு நஸ்ரின் என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், நேற்று மதியம் பிரசவவலியால் துடித்துள்ளார். இவருக்கு பூந்தமல்லியில் உள்ள தாய்-சேய் நல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்பொழுது அங்கு பிரசவம் பார்க்கும் டாக்டர் பணியில் இல்லாதால், அங்குள்ள செவிலியர் ஒருவர் நஸ்ரினுக்கு பிரசவம் பார்த்து வந்தார். அப்பொழுது அவர் நஸ்ரினுக்கு பெண் குழைந்தை பிறந்துள்ளதாகவும், ஆனால் அது பிறக்கும்போதே இறந்துவிட்டதாக கூறிவந்தார். […]