ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக பல மருத்துவமனைகளில் தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்பட்டதாக புகார் எழுந்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்க பல முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் ஸ்டெர்லைட்டில் […]