பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த ஆண்டு ஓமானில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. […]