சிவகங்கை: சிங்கம்புணரி அருகே தனியார் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. குவாரியில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுமார் 450 அடி ஆழமுள்ள இந்த குவாரியில் திடீரென பெரிய அளவில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. பாறைகளை அகற்றுவதற்காக பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த சரிவு […]
நிவர் புயல் எதிரொலியால் அரக்கோணத்தில் இருந்து, 36 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர். தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிவர் புயலாக உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்த புயலானது புதுச்சேரியிலிருந்து 440 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதால், புதுச்சேரி அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு […]