#NivarCyclone : நிவர் புயல் எதிரொலி! புதுச்சேரி விரைந்த மீட்பு குழுவினர்!

A 36-member National Disaster Rescue Team has rushed to Pondicherry from Hemisphere in the aftermath of Hurricane Nivar.

நிவர் புயல் எதிரொலியால் அரக்கோணத்தில் இருந்து, 36 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர்.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிவர் புயலாக  உருவாகியுள்ளது.

இந்நிலையில், இந்த புயலானது புதுச்சேரியிலிருந்து 440 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதால், புதுச்சேரி அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, அரக்கோணத்தில் இருந்து, 36 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர்.  மேலும், புயல் நேரத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.