திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த அதிகாரிகள் வெடிகுண்டு சோதனை பிரிவினரை அனுப்பினர். முதலமைச்சர் அலுவலகம் மற்றும் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்ததால், மோப்ப நாய்கள் மற்றும் சிறப்புக் குழுக்கள் மூலம் முழுமையான ஆய்வு நடந்து வருகிறது. இருப்பினும், இதுவரை இரு இடங்களிலும் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நேற்றைய தினம், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு […]
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது. பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும், புதிய அறிவிப்புகள் தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முந்தைய ஆண்டின் முழு பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், இன்று பிற்பகல் 12 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் […]
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025 – 2026 நிதிநிலை அறிக்கை அடுத்த மாதம் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்குத் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவையில் காலை 9.30 மணிக்கு தமிழக நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார். இதற்கு பிறகு, மார்ச் 15ஆம் தேதி தேதி காலை 9.30 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். […]
நேபாள நாட்டு பிரதமர் சர்மா ஒலியின் முதன்மை செயலாளர் மற்றும் செயலகத்தில் பணியாற்றும் 5பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாள பிரதமர் அலுவகத்திலிருதுவெளியான தகவல்: நேபாள பிரதமரின் அரசியல் ஆலோசகர் பிஷ்னு ரீமல், ஊடக ஆலோசகர் சூர்யா தபா, வெளிவிவகார ஆலோசகர் டாக்டர் ராஜன் பட்டாராய் ஆகியோர்க்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் ஒலியின் முதன்மை செயலாளர் இந்திரா பண்டாரி மற்றும் செயலகத்தின் புகைப்படக்கலைஞன் ராஜன் காப்ளே ஆகிய 2 அதிகரிகளுக்கும் கொரோனா தொற்று […]
லோக் ஆயுக்தா தேர்வுக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூலை 9ஆம் தேதி லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, தேடுதல் குழுவை தேர்வு செய்வதற்கான, தேர்வுக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்வுக்குழுவின் உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. இருப்பினும் முதலமைச்சர் அறையில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், சபாநாயகர் தனபாலும் ஆலோசனை நடத்தினர். இதில், அரசு உயர் […]