சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. இந்தியாவின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்காக ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டு இந்த முடிவை எடுத்துள்ளது. அதே சமயம், எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் தன்னுடைய ஸ்டார் லிங்க் (Starlink) திட்டத்தை அனைத்து நாடுகளிலும் செயல்படுத்த முடிவெடுத்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார். […]