உலகக்கோப்பை தொடரின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு. ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 குரூப் சுற்றில் இன்றைய தினத்தின் 2வது போட்டியான இயோன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீச்சை நடத்துகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. […]