கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா, தனியார் வங்கியில் ரூ 38 கோடி டெபாசிட் செய்திருப்பது அமலாக்கத்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதேபோல், அந்த வங்கியில் ஸ்வப்னாவுக்கு லாக்கர் இருப்பதும் தற்போது விசாரனையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கின் மற்றொரு குற்றவாளியான சந்தீப்புக்கும், ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்திற்கும் அந்த வங்கியில் கணக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. ஸ்வப்னாவின் கணக்கிற்கு பல பேரிடமிருந்து பணம் வரவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் […]