இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4 ஆண்டுகள், 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2023 செப்டம்பர் 28ஆம் தேதி இரவு டேனியல் கிரஹாம், ஆடம் கார்ருதர்ஸ் எனும் இருவர் ரம்பத்தை பயன்படுத்தி மரத்தை வெட்டியிருக்கின்றனர். மேலும், அதனை வீடியோ ஆகவும் பதிவு செய்திருந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், வடகிழக்கு இங்கிலாந்தின் நியூகேஸில் கிரவுன் நீதிமன்றத்தில் […]