தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.இளமாறன் திடீர் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானர்.மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து,சென்னை வியாசர்பாடியில் உள்ள இல்லத்தில் ஆசிரியர் இளமாறன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.மேலும்,இளமாறன் அவர்களின் மறைவு காரணமாக அவரது குடும்பத்தினருக்கு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவரும், ஆசிரியர் சமுதாயத்தின் நலனிற்காக தொடர்ந்து போராடி வந்த களப்போராளியுமான திரு. பி.கே.இளமாறன் அவர்கள் மாரடைப்பு காரணமாக காலமானார். […]