தைப்பூசம் : மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில் இயக்கம்.!
மதுரை : தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும், சிவன் கோயில்களிலும் இவ்விழா நாளை நடைபெறும். இதனையொட்டி, நாளை அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறையாகும். மேலும், பழனி முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் இலவச தரிசனத்திற்கு அனுமதி […]