மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10 மணிக்குள் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 7 நிலைகளைக் கொண்ட 125 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில், வேத மந்திரங்கள் முழங்க, லட்சக்கணக்கான பக்தர்களின் “அரோகரா” கோஷத்துடன் புனித நீர் கலசங்களில் ஊற்றப்பட்டது. ராஜகோபுரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டு, கோயிலின் புனரமைப்பு பணிகள் உச்சகட்டமாக இந்த விழாவில் நிறைவடைந்தன. குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து, இன்று காலை 7:30 […]