நாளை முதல் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் ரெம் டெசிவர் மருந்து வழங்கப்படுவதாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் அறிவிப்பு. இத்தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது மக்களின் நலன் கருதி கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இரண்டு கவுண்டர்கள் அமைத்து ரெம்டெசிவிர் மருந்து மிக குறைந்த விலையில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது, மக்களின் வசதிக்கு ஏற்ப நாளை முதல் ரெம்டெசிவிர் மருந்து […]
முதலமைச்சரின் பொதுநிவராண நிதிக்கு பொதுமக்கள் நன்கொடை வழங்குமாறு முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலைக்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். பேரிடர் […]
கொரோனா பாதிப்பில் கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் 3வது இடத்தில் உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு. தினசரி கொரோனா பாதிப்பில் கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது என்றும் கூறியுள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் […]
தமிழகத்தில் இன்று மட்டும் 28,978 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 28,978 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில், இதுவரை மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 14,09,237 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 7,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 232 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 15,880 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று […]
தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவின் காரணமாகவும், நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் நாளை முதல் முழு ஊரடங்கு அமலில் வரவுள்ளது. இந்த ஊரடங்கில் தேநீர் கடை, மளிகை கடை, இறைச்சி கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், போக்குவரத்துக்கு ஆகியவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொழில் நிறுவனங்கள் […]
கொரோனா பரவல் காரணமாக தமிழக்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலில் வரவுள்ளதால், காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுறுத்தல். தமிழகத்தில் நாளை முதல் 24ம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளன. இந்த நிலையில், முழு ஊரடங்கில் காவல்துறையினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதையை குறைவாகவோ மக்களிடம் நடந்துகொள்ளக்கூடாது. மார்க்கெட் போன்ற இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை […]
ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை நோயாளிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய இடவசதி இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை தாராளமாக பயன்படுத்திக் கொள்ள […]
கொரோனா கட்டளை மையத்திற்கு 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரனா பரவலை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் கட்டளை மையம் (War room) அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தாரேஷ் அகமது, கே.நந்தகுமார், உமா, வினித், கே.பி.கார்த்திகேயன், அழகுமீனா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 104 என்ற எண் மூலம் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26,465 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 26,465 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், இதுவரை மொத பாதிப்பு 13,23,965 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல இன்று மட்டும் 197 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 15,171 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படத்தில் சென்னையில் மட்டும் 6,738 […]
கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் பெறுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது என உயர்நீதிமன்றம் கிளை கருத்து. தமிழக அரசு நிர்ணயித்துள்ள விலை நிர்ணயபடி தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்கின்றனவா? என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தனியார் மருத்துவமனைகள், கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் பெறுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது என்றும் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் பெறுவதை முறைப்படுத்த முன்வர வேண்டும் என்றும் […]
நாளை முதல் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இன் கீழ் தமிழக முழுவதும் இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இருப்பினும் தினந்தோறும் பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்திட,நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தமியாகி அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் அடிப்படையில், அரசு […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மு.க.ஸ்டாலினுடன் மீண்டும் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நிதித்துறை செயலர், வருவாய்த்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் நிலையில், ஆலோசனை மேற்கொள்கிறார் முக ஸ்டாலின். இதனிடையே, நேற்று மாலையும் முக […]
தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2வது அலையை கட்டுப்படுத்த முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சென்னையை சேந்த பாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. மேலும், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் […]
தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த வரும் 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றம் செய்யப்படுகிறது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நிரந்தர பணிக்கு மாற்றப்பட்ட 1,212 செவிலியர்கள் சென்னையில் கொரோனா பணியில் ஈடுபடவுள்ளனர். பின்னர் தங்களது மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளனர். ரூ.15,000 சம்பளம் பெற்று வந்த செவிலியர்களுக்கு இனி ரூ.40 ஆயிரம் ஊதியம் கிடைக்கும் என்றும் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு முனைப்புடன் நடைபெற்றிட அதிகாரிகளுக்கு வலியுறுத்தினேன் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனி பெரும்பான்மை பெற்று, திமுக தலைவர் முக ஸ்டாலின் வரும் 7ம் தேதி ஆளுநர் மாநிலகையில் முதல்வர் பதவி ஏற்கவுள்ளார். இந்த நிலையில், முக ஸ்டாலினுடன், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். புதிய அரசு பதவியேற்பு, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முக ஸ்டாலினுடன் ஆலோசனை […]
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், பாதிப்பு எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றின் பரவல் காரணமாக தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு (இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, கடந்த சில தினங்களாக அமலில் உள்ளது. இதனைத்தொடர்ந்து நோய் பரவலை கருத்தில் கொண்டு […]
தமிழக அரசு கேட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு எப்போது தரும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கான தடுப்பூசி, உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து எப்போதும் வரும் என தெரியாது என்றும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்கனவே கையிருப்பில் உள்ளது எனவும் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் இருந்து 1.5 கோடி தடுப்பூசிகள் ஆர்டர் கொடுத்திருந்தாலும், எப்போது வந்து சேரும் […]
தமிழகத்தில் ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவலை தடுப்பது கடும் சவாலாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 18 முதல் 44 […]
கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா என்பது குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை. தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களின் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா என்பது குறித்து ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும், நெல்லை, கோவை, திருப்பூர், திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரிப்பால் […]
மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மே 1ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான மறு அறிவிப்பு வரும் வரை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற வகுப்பு மாணவர்கள் அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்கவும், […]