அதிக கட்டணம் பெறுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது – ஐகோர்ட் கிளை

கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் பெறுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது என உயர்நீதிமன்றம் கிளை கருத்து.
தமிழக அரசு நிர்ணயித்துள்ள விலை நிர்ணயபடி தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்கின்றனவா? என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தனியார் மருத்துவமனைகள், கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் பெறுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது என்றும் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் பெறுவதை முறைப்படுத்த முன்வர வேண்டும் என்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் விவரம் குறித்து வெளிப்படைத்தன்மை தேவை எனவும் கூறியுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறித்த விவரங்கள் வெளிப்படையாக இருந்தால் மக்களுக்கு அது உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025