மே 8 முதல் கேரளாவில் முழு ஊரடங்கு – கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு!

A full curfew has been declared across Kerala from May 8 to 16 as the impact of corona in Kerala has increased.

கேரளாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கேரளா முழுவதும் மே 8ஆம் தேதி முதல் 16ஆம தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கேரளாவில் 40 இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கேரளாவில் 5,565 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இருப்பினும் மற்ற மாநிலங்களை போல கேரளாவில் மருத்துவமனையில் படுக்கை வசதி பற்றாக்குறையே ஆக்சிஜன் பற்றாக்குறையே தற்பொழுது வரை ஏற்படவில்லை. இருப்பினும், சிறிய அளவிலான கட்டுப்பாடுகள் உடன் கூடிய ஊரடங்கு கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தவில்லை என காவல்துறையினர் சார்பில் கேரள முதல்வருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் வருகின்ற மே 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை அடுத்த 9 நாட்களுக்கு கேரளா முழுவதும் முழு ஊரடங்கு என அறிவித்துள்ளார்.