பிரேசிலில் இணைந்த தலை மற்றும் மூளையுடன் பிறந்த இரட்டைக் குழந்தைகள் பிரிக்கப்பட்டுள்ளனர். ஆர்தர் மற்றும் பெர்னார்டோ லிமா 2018 ஆம் ஆண்டில் வடக்கு பிரேசிலில் உள்ள ரோரைமா மாநிலத்தில் தலை ஒட்டிய இரட்டையர்களாகப் பிறந்தனர். விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பிரேசிலில் உள்ள ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவர்கள் 33 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரித்தெடுத்தனர். இந்த அறுவை சிகிச்சையில் 100 மருத்துவர்கள் ஈடுபட்டனர். லண்டனை சேர்ந்த மருத்துவ தொண்டு நிறுவனமான ஜெமினி அன்ட்வைட், […]
பிரேசிலில் உள்ள இரட்டையர்கள் இருவர் ஒரே நேரத்தில் ஆண்களாக இருந்து பெண்களாக மாற்று பாலின அறுவை சிகிச்சை மூலமாக மாறியுள்ளனர். 2002 ஆம் ஆண்டு தென் அமெரிக்காவை சேர்ந்த பிரேசிலில் உள்ள டபிரா எனும் கிராமத்தில் பிறந்த சோபியா அல்புர்க், மைலா ரெசன்டே எனும் இரட்டையர்கள் பிறப்பிலேயே ஆண்களாக தான் இருந்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்குள் நாளுக்கு நாள் பெண்களின் தன்மை அதிகரித்து வந்ததையடுத்து பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். இதனையடுத்து அவர்கள் குடும்பத்தினர் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவு […]
வேலூர் மாவட்டம், காட்பாடியில் இரட்டைச் சகோதரிகள் தங்களின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம், காட்பாடியில் பிளஸ் 2 படித்து வந்த இரட்டை சகோதரிகள், பத்மப்ரியா, ஹேமப்பிரியா. இவர்கள் இருவரும் தங்களின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவிகள் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.