வேலூரில் இரட்டை சகோதரிகள் தூக்கிட்டு தற்கொலை!
வேலூர் மாவட்டம், காட்பாடியில் இரட்டைச் சகோதரிகள் தங்களின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் பிளஸ் 2 படித்து வந்த இரட்டை சகோதரிகள், பத்மப்ரியா, ஹேமப்பிரியா. இவர்கள் இருவரும் தங்களின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவிகள் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.