சென்னை : 2025 – 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு. அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் பெண்களின் பொருளாதார மேம்பாடு, பாதுகாப்பு, கல்வி, மற்றும் சமூக நலனை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பெண்களுக்கு […]
சென்னை : மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா சுமை பயணச்சீட்டை வழங்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நகரப் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில் 100 கி.மீ வரை, மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் 25 கிலோ வரையிலான பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது. விற்பனைப் பொருட்களின் சுமைக் கூலியை கொடுக்க முடியாமல் தவித்த மகளிர் சுய […]
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறக்கிறார். இப்படி இருக்கையில், விழா ஒன்றில் பேசிய நடிகர் சிரஞ்சீவி, “ராம் சரணின் பரம்பரை தொடர, அவருக்கு மகளுக்குப் பதிலாக ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக” கூறினார். சிரஞ்சீவிக்கு ஸ்ரீஜா கொனிடேலா மற்றும் சுஷ்மிதா கொனிடேலா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு நவிஷ்கா, நிவராதி, சமாரா மற்றும் […]
நாட்டில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவையில் தேர்தலில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. அதுவும், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ் கட்சியை தோற்கடித்து, காங்கிரஸ் முதன் முறையாக தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. இந்த சூழலில், […]
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்விக்கு காலவரையற்ற தடை விதித்து தலிபான்கள் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளனர். உயர்கல்வித்துறை அமைச்சகம், அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு இந்த உத்தரவிற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, பெண்களின் கல்வியை நிறுத்தி வைக்கும் உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச டிக்கெட்டால் பெண்களை ஓட்டுநர், நடத்துநர்கள் அவமதிக்கின்றனர் என திமுக கவுன்சிலர் விமர்சனம். சிவகங்கை மாவட்டம் திருபுவனம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய 16-ஆவது வார்டு திமுக கவுன்சிலரும், ஒன்றிய குழு உறுப்பினருமான ஈஸ்வரன், பேருந்தில் இலவச டிக்கெட்டால் பெண்களை ஓட்டுநர், நடத்துநர்கள் அவமதிக்கின்றனர் என ஆவேசமாக பேசியதால், திமுக ஒன்றிய குழு தலைவர் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தால் பெண்களை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் […]
2-ஆம் ஆண்டு மாணவர்களும் கல்வி பயில்வதற்கு கட்டணமில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு. சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று வந்தாலும் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வரும்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை கடந்த ஆண்டு அமைச்சர் அறிவித்தார். கோரிக்கை வைக்காமலேயே […]
ஆகஸ்ட் 11ம் தேதி அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என ஹரியானா மாநில அரசு அறிவிப்பு. ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 11ம் தேதி அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஹரியானா போக்குவரத்து பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்று ஹரியானா […]
வாசனை திரவிய விளம்பரத்தை கைவிடுமாறு ட்விட்டர், யூடியூப் நிறுவனங்களை ஐ&பி அமைச்சகம் உத்தரவு. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை ஊக்குவிக்கும் வகையிலான, வாசனை திரவிய பிராண்டின் விளம்பரத்தை உடனடியாக நீக்க ட்விட்டர், யூடியூப் நிறுவனங்களுக்கு தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வாசனை திரவிய விளம்பரம் தொடர்புடைய நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ட்விட்டர், யூடியூப் நிறுவனங்களுக்கு தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், பாலியல் குற்றங்களை ஊக்குவிக்கும் வகையிலான, […]
இட ஒதுக்கீட்டிலும் பெண்கள் அதிகளவில் பலனடைவதால் ஆண்களுக்கான வாய்ப்பு பறிபோவதாக புகார். தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2 / 2A தேர்வுகள் 4,012 தேர்வு மையங்களில் தொடங்கி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் tnpscgroup2 தேர்வுகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்றது. 5,529 காலிப்பணியிடங்களுக்கு 6.82 லட்சம் பெண்கள் உளப்பட மொத்தம் 11.78 லட்சம் பேர் குருப் 2 தேர்வு எழுதினர். Group 2 / 2A தேர்வுக்கு இந்த முறை ஆண்களை விட பெண்கள் […]
கருக்கலைப்பு என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமை மற்றும் அரசியலமைப்பு உரிமை என்று 1973-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த மைல்கல் ரோ வெர்சஸ் வேட் முடிவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் வரைவு அறிக்கை தயார் செய்து வருவதாக கூறப்படும் ஆவணம் ஒன்று நேற்று அமெரிக்காவில் கசிந்தது.இது அமெரிக்க பெண்கள் மற்றும் சமூகநலச் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கோபத்தை தூண்டியது.இதனால்,பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் செய்தி அமெரிக்க கருக்கலைப்புச் சட்டங்களை மத்திய கிழக்கில் உள்ள சட்டங்களுடன் […]
டெல்லியில் உள்ள நான்கு பெரிய அரசு மருத்துவமனைகளாகிய எய்ம்ஸ், ராம் மனோகர் லோகியா, சப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் சுசேதா கிரிப்லானி ஆகிய 4 மருத்துவமனைகளிலும் ஒவ்வொரு மாதமும் பிரசவத்திற்கு பின் 16 பெண்கள் உயிரிழப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த 4 மருத்துவமனைகளிலும் ஜனவரி 2015 முதல் செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு பிரசவத்திற்கு பின்பு 1281 பெண்கள் பிரசவத்திற்கு பின் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் பெண்களின் பிரசவத்திற்கு பின் ஏற்படும் உயிரிழப்புக்கு, அதிக ரத்தப்போக்கு, […]
மகளிர் குழுக்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன் ரத்து செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆணையில், 13.08.2021 அன்று தாக்கல் செய்த திருத்த வரவு செலவு திட்டம் 20212022 இல், “கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். கடன் வழங்குவதற்கு ஏதுவாக இச்சங்கங்களுக்கு பல்வேறு கட்டங்களில் நிதிநிலை வழங்குவதற்கான நடைமுறையை அரசு வகுக்கும். இதற்காக 600 கோடி ரூபாய் […]
உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ பாபு பவனில் உள்ள அதிகாரி ஒருவரிடம் வேலை பார்த்த பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி அவர் கைது செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பான செய்திகள் அதிக அளவில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தற்போது இது குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
அங்கன்வாடிப் பணியாளர் நேரடி நியமன விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அங்கன்வாடிப் பணியாளர் ,குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களில் விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கு 25% இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: “அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்டத்தினை ஓர் அலகாக கொண்டு இனசுழற்சி முறையிலான இடஒதுக்கீட்டு முறையினையும், இனசுழற்சி முறையை கடைப்பிடிப்பது தொடர்பாக […]
பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் மிகவும் முக்கியமான ஒன்று. மேலும் இந்த நாட்களில் பெண்கள் அனைவருமே சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். முன்பெல்லாம் மாதவிடாய் நேரங்களில் பெண்கள் துணிகளை உபயோகித்தார்கள். ஆனால் தற்பொழுது அதிக அளவில் நாப்கின்களை தான் பெண்கள் உபயோகிக்கிறார்கள். இதனால் சிலருக்கு அலர்ஜி மற்றும் ஒவ்வாமை ஏற்படுகிறது. மேலும், இதன் காரணமாக கர்ப்பப்பை சம்பந்தமான நோய்களும் ஏற்படுகிறது. எனவே தற்போது சானிட்டரி நாப்கினுக்கு பதிலாக மாற்று உபயோகமாக பல பொருட்கள் வந்துள்ளது. ஆனால் அவை நாம் […]
டெல்லி தலைநகரில் 6 மாவட்டங்களுக்கு பெண் டிசிபிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். டெல்லி தலைநகரில் உள்ள 15 மாவட்டங்களில் ஆறு மாவட்டங்களில் டெல்லி காவல்துறை இப்போது பெண் துணை ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்னர். அவர்களில், மூன்று பேர் அந்தந்த மாவட்டங்களில் ஏற்கனவே பணியாற்றி வருகின்றனர். சனிக்கிழமை வெளியிடப்பட்ட உத்தரவின்படி, லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் 11 சிறப்பு போலீஸ் கமிஷனர்கள் மற்றும் 28 துணை போலீஸ் கமிஷனர்கள் மற்றும் கூடுதல் டிசிபிகளை இடமாற்றம் செய்தார். அந்த உத்தரவில் 2010-ஐபிஎஸ் […]
ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்கு செல்ல தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில்,பெண்களை ஒடுக்க மாட்டோம் என்று தலிபான்கள் வாக்குறுதி அளித்தனர்.ஆனால்,அதற்கு மாறாக தொடர்ச்சியாக அந்நாட்டில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் கல்வி கற்பதற்கும் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு மந்திரி சபையிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் கல்வித்துறை மந்திரி அப்துல் பாகி ஹக்கானி பெண்களின் உயர்கல்வி குறித்து புதிய வழிமுறைகளை வெளியிட்டார்.அதன்படி, பெண்கள் பல்கலைக்கழகங்களில் […]
கடந்த ஆண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 77 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரக்கூடிய தேசிய குற்ற ஆவண காப்பகம் தற்பொழுது அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிராக நாடு முழுவதும் 3,71,503 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு சம்பவங்கள் மட்டும் 27,046 பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. […]
ஆண்கள் இல்லாத வகுப்பறைகளில் பெண்கள் படிக்கலாம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், தொடர்ச்சியாக அந்நாட்டில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் கல்வி கற்பதற்கும் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு மந்திரி சபையிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் கல்வித்துறை மந்திரி அப்துல் பாகி ஹக்கானி பெண்களின் உயர்கல்வி குறித்து புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, பெண்கள் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி […]