சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் துப்பாக்கி ஏந்திய 10 NSG கமாண்டோக்கள், 55 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், இதில், குண்டு துளைக்காத வாகனங்களும் அடங்கும். அண்மையில் இபிஎஸ்-க்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் இரு முறை கொலை மிரட்டல் விடுத்தது […]