சென்னை : தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. நேற்று இரவு முதலே திரளான தொண்டர்கள் மாநாடு திடலை நோக்கி திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். தற்போது வரையில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் குவிந்துள்ளனர். இந்த மாநாட்டில் காமராஜர், தந்தை பெரியார், அம்பேத்கர் ,வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் உள்ளிட்ட தலைவர்களின் கட்அவுட்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்அவுட்கள் பற்றியும், தவெக மாநாடு பற்றியும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மதுரையில் செய்தியாளர்களிடம் […]
தூத்துக்குடி : த.வெ.க தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் கட்சியின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக கட்சியின் பொதுச்செயலாளர் N. ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) தலைமையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் அந்த மாவட்டங்களின் பொறுப்பாளர் தலைமையில் மாநாட்டுக்கு தொண்டர்கள் கிளம்பி இருக்கிறார்கள். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா அக்னல் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட தொண்டர்கள் பலரும் அக்டோபர் 26 சனிக்கிழமை […]
விக்கிரவாண்டி : த.வெ.க தொண்டர்கள் அனைவரும் காத்திருந்த கட்சியின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறுகிறது. எனவே, மாநாட்டில் விஜய் என்ன பேசப்போகிறார் என்பதைப் பார்க்க மாநாட்டிற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தொண்டர்களும், பொதுமக்களும் கூட்டம் கூட்டமாக வருகை தந்துகொண்டு இருக்கிறார்கள். மாநாடு தொடங்க இன்னும் சில மணி நேரங்கள் இருக்கிறது. ஆனால், அதற்குள் தொண்டர்கள் இன்று அதிகாலை முதலே மாநாட்டிற்குள் சென்று இடம் பிடித்து வருகிறார்கள். ஒரு பக்கம் மாநாடு நடைபெறும் இடத்தில் கிட்டத்தட்டப் […]
விழுப்புரம் : விக்கிரவாண்டி தவெக மாநாட்டில் பங்கேற்க தொண்டர்கள் பெரும் திரளாக வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர், இருக்கைகள் என அடிப்படையான வசதிகளை ஏற்படுத்தி, மாநாட்டைச் சிறப்பாக நடத்தி முடிக்க தவெக-வினர் அதீத கவனம் செலுத்தி, இரவு பகலாக உழைத்துள்ளனர். இந்த நிலையில், இவர்களுக்கு கியூ.ஆர் கோடு வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆம், மாநாட்டிற்கு பங்கேற்பாளர்களின் பதிவை ஒழுங்குபடுத்தவும், பங்கேற்பாளர் எண்களைக் கண்காணிக்கவும், தமிழக வெற்றிக் கழக மாநாட்டு அரங்கில் QR குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் […]
விழுப்புரம் : பல்வேறு சவால்களையும், தடைகளையும் தகர்த்து விக்ரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் விக்ரவாண்டியை நோக்கிப் படையெடுத்துள்ளனர். தமிழகம் இதுவரை பார்த்திடாத மாநாட்டு நிகழ்வுகளை நேரடியாகப் பார்த்துக்கொண்டு இருக்கும் சூழலில், அக்கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும், விஜய் பெயருக்கு இழிவு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகக் களத்தில் இருக்கும் அக்கட்சியின் […]
விக்கிரவாண்டி : வி.சாலையில் நடைபெறும் தவெக முதல் மாநாட்டிற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தொண்டர்களும், பொதுமக்களும் எனக் கூட்டம் கூட்டமாக மக்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கும் இந்த மாநாட்டில் விஜய் என்ன பேசுவார்? அவரது கட்சியின் கொள்கைகள் என்னென்ன? என்று எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களிடையே இருந்து வருகிறது. மேலும், இந்த மாநாடு வி.சாலையில் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது முதல் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி பக்கா பிளானுடன் […]
விழுப்புரம் : தவெகவின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடக்கிறது. விஜய்யின் முதல் மாநில மாநாட்டை முன்னிட்டு விக்கிரவாண்டியே திருவிழா போல் களைகட்டி வருகிறது. அந்த வகையில், இதற்காக அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், மாநாடு நடக்கும் வி.சாலையில் அதிகாலையிலேயே அதிகளவில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. ஆம், இன்று மாலை 6 மணி மாநாட்டுக்கு காலை 6 மணிக்கே ரசிகர்கள், பொதுமக்கள், தொண்டர்கள் என இப்போதே மாநாட்டு அரங்கம் நிரம்பி வழிகிறது. இதனால், 10 […]
சென்னை : இன்று மாலை விஜயின் தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக, நேற்று நள்ளிரவு முதலே விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் மற்றும் குடும்பங்கள் எனக் கூட்டம் கூட்டமாக மாநாடு திடலில் குவிந்துள்ளனர். இந்த நிலையில், விழுப்புரத்தில் இன்று நடக்கும் தவெக மாநாட்டுக்குக் கொடியுடன் சென்று கொண்டிருந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையம் அருகே லாரி மீது பைக் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி […]
சென்னை : விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாடு, விக்கிரவாண்டியில் இன்று நடைபெறவுள்ளது. மாநாடு நடைபெறவிருக்கும் இடத்தில், பிரமாண்ட மாநாட்டு திடல், கவுட் அவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை நேற்று இரவு விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து, இன்று அங்குள்ள 100 அடி கம்பத்தில் தவெக கொடியை அவர் ஏற்றிவைத்து உரைநிகழ்த்த உள்ளார். மாநாட்டையொட்டி விக்கிரவாண்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல், விக்ரவாண்டியில் நடக்கும் தவெக மாநாடுக்கு செல்லும் தொண்டர்களுக்கும், அந்த […]
விழுப்புரம் : தமிழகமே எதிர்நோக்கி காத்திருக்கும் தவெக கட்சியின் முதல் மாநாடானது இன்று விக்ரவாண்டியில் நடைபெற உள்ளது. மேலும், மாநாட்டிற்க்கான அனைத்துத் தேவைகளும் பக்காவாக தயாராகி இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவரான விஜய் நேற்று இரவு மாநாட்டு திடலில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், நேற்று மாலை பொழுதே மாநாடு திடலுக்கு சென்ற விஜய், சிறுது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டுப் பிறகு சுமார் 2 மணி நேரம் அங்கு ஆய்வு […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு நாளை நடைபெற உள்ளது. தனது அரசியல் பயணத்தின் மிக முக்கிய படியை நடிகர் விஜய் முன்னெடுத்துள்ளார். நாளைய தினத்தை தவெகவினர் மட்டுமின்றி தமிழக அரசியல் களம் எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஏற்கனவே, பெரியார், காமராஜர், அம்பேத்கரை முன்மொழிந்து முந்தைய மேடைகளில் பேசி வந்த தவெக தலைவர் விஜய், தற்போது தனது மாநாட்டிலும் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பிரமாண்ட கட்அவுட்களை நிறுவியுள்ளார். அதே போல சுதந்திர போராட்ட தியாகிகள் […]
விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நாளை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. கட்சியின் முதல் மாநாடு இது என்பதால் தமிழகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்குப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. எந்த அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது என்பது பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். குடிக்கத் தண்ணீர் வசதியிலிருந்து செல்போன் பேச டவர் வசதி வரை பெரிய பெரிய வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது, ஏற்பாடுகள் பிரமாண்டமாகச் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், மாநாட்டுக்கு வருகை தரும் […]
விழுப்புரம் : விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறவுள்ளது. இது கட்சியின் முதல் மாநாடு என்ற காரணத்தால் பல மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மாநாடு வேலைகளும் 80 % முடிந்துள்ளது. மாநாட்டில் விஜயின் பேச்சையும், அவரை பார்க்கவும் தொண்டர்கள் மகிழ்ச்சியாக காத்துள்ளனர். இந்நிலையில், மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், கட்சி தொண்டர்கள் பலரும் தங்களுடைய சொந்த செலவுகளில் பெரிய பெரிய பேனர்களையும் மாநாடு நடைபெறும் […]
சென்னை : இதுவரை திரை நட்சத்திரமாக உச்சத்தில் இருந்த நடிகர் விஜய், தற்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூலம் அரசியல் கட்சித் தலைவராகவும் உருவெடுத்துள்ளார். அக்கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விவி சாலையில் நடைபெற உள்ளது. இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகளை தவெக தொண்டர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். நாளை மாலை தொடங்கும் இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் தனது கட்சி கொள்கை, கட்சிக்கான கோட்பாடுகளை அறிவிக்க உள்ளார். […]
விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நாளை பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டுக்கு வருகை தருபவர்களுக்கு வாகனம் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும், அவர்கள் அமர நாற்காலிகள் போடும் ஏற்பாடுகள் மற்றும் குடிக்க குடிநீர் வசதிகள் என முக்கியமான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மாநாட்டு திடலில் பொதுமக்கள் அமர 50,000 இருக்கைகள் உள்ளது. கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்க 48 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கூட்டம் அதிகரித்தால் வெளியே நின்று காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக […]
விழுப்புரம் : தமிழக மக்களுடைய ஒட்டுமொத்த கவனமும் நாளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வைத்து நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் தான் இருக்கிறது. இது கட்சியின் முதல் மாநாடு என்ற காரணத்தால் பல மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, அவர்களுடைய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு கட்சித் தலைவர் விஜய் வேண்டுகோள் ஒன்றை […]
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டில் இதுவரை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மேற்கொள்ளாத ஏற்பாடுகள் தவெக மாநாட்டில் மிகவும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு தொடக்கம் முதல் இறுதி வரை முழுக்க முழுக்க கொள்கையை மையப்படுத்தியே அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாநாட்டில் தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் […]
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்கள் , தொழிற்சங்கம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஒரு மதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் அண்மையில் தொழிலாளர்களுக்கும், நிறுவனத்திற்கும் உடன்பாடு எட்டப்பட்டு தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். தொழிலாளர்களுக்கும், நிறுவனத்திற்கும் இடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் தமிழக அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தாமோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, ஏ.வ.வேலு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி […]
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை மாலை 4 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுகிறது. மாநாடு நாளை நடைபெறும் நிலையில், ஒரு பக்கம் தவெக நிர்வாகிகள் நேற்று மாலை முதலே குவிய தொடங்கினர். மறுபக்கம், பாதுகாப்புக்காகக் குவியும் காவல்துறை அதிகாரிகள். ஆம், மாநாட்டின் பாதுகாப்பிற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தனியார் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்கள் தனித்தனி அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த அணிகள் எந்த […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு நாளை (அக்டோபர் 27) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான வேளைகளில் கட்சி நிர்வாகிகள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தவெக தலைவர் விஜய் மாநாடு குறித்த பல்வேறு அறிவுரைகளை தொண்டர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் வழங்கி வருகின்றார். அதேபோல தற்போதும் மாநாடு குறித்த வழிகாட்டு அறிவுரைகளை வழங்கியுள்ளார் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக பதிவிடுகையில், ” பெயரைப் போல சில விசயங்களைத் […]