இன்று தவெக மாநாடு: சென்னை – திருச்சி.. நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்.!

தமிழ்நாடு காவல்துறை விழுப்புரம் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TVK Maanadu road route

சென்னை : விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாடு, விக்கிரவாண்டியில் இன்று நடைபெறவுள்ளது. மாநாடு நடைபெறவிருக்கும் இடத்தில், பிரமாண்ட மாநாட்டு திடல், கவுட் அவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதை நேற்று இரவு விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து, இன்று அங்குள்ள 100 அடி கம்பத்தில் தவெக கொடியை அவர் ஏற்றிவைத்து உரைநிகழ்த்த உள்ளார். மாநாட்டையொட்டி விக்கிரவாண்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அது மட்டும் இல்லாமல், விக்ரவாண்டியில் நடக்கும் தவெக மாநாடுக்கு செல்லும் தொண்டர்களுக்கும், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் பயணிகளுக்கும் தமிழ்நாடு காவல்துறை விழுப்புரம் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்

  • திருச்சி நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் – திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருப்பி விடப்படுகின்றன.
  • சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கனரக வாகனங்கள் – திண்டிவனத்தில் இருந்து வில்லியனூர் வழியாக விழுப்புரம் செல்லலாம்.
  • சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கார்கள் – திண்டிவனத்தில் இருந்து மயிலம், பெரும்பாக்கம் வழியாக விழுப்புரம் செல்லலாம்.
  • திருச்சியில் இருந்து சென்னை வரும் பேருந்து, கார்கள் – செஞ்சி, – திண்டிவனம் வழியாக சென்னை வரலாம்
  • திருச்சியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் – வில்லியனூர், திண்டிவனம் வழியாக சென்னை வரலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai