IND vs NZ : மோசமான சாதனை… கேப்டனாக ரோஹித் சர்மா முதலிடம்!

நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் தோல்வி மூலம் கேப்டனாக ரோஹித் சர்மா மோசமான சாதனையைப் படைத்துள்ளார்.

Rohit Sharma

புனே : இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் நியூஸிலாந்து அணி அபாரமாக வெற்றிப் பெற்று 2-0 என தொடரையும் கைப்பற்றியது. இதன் மூலம் இந்திய மண்ணில் தனது ஆதிக்கத்தை நியூஸிலாந்து அணி செலுத்தி இருக்கிறது.

மேலும், இந்தத் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததன் மூலம் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிகத் தோல்விகளைக் கண்ட கேப்டனாக ரோஹித் சர்மா மாறி இருக்கிறார். அதுவும், இந்த நூற்றாண்டில் ஒரு கேப்டனாக சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைத் தழுவிய இந்திய கேப்டன்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

இதுவரையில், மொத்தமாக சொந்த மண்ணில் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 4 போட்டிகளில் தோவலியைத் தழுவியுள்ளார். மேலும், இவருக்கு பின்னால் 3 தோல்விகளுடன் எம்.எஸ்.தோனியும் மற்றும் கங்குலியும் 2-ஆம் இடத்தில் இருந்து வருகின்றனர். மேலும், பல ஆண்டுகளாக இந்தியா தக்கவைத்த சாதனையையும், நியூஸிலாந்து அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி அந்த சாதனையையும் உடைத்துள்ளது.

அதாவது, 12 ஆண்டுகளாக இந்திய அணி தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோவலியடைந்தது இல்லை. ஆனால், இந்த தொடரின் தோல்வியின் மூலம் அதுவும் நிகழ்ந்துள்ளது. இந்த மோசமான சாதனையும் ரோஹித் ஷர்மாவின் தலைமையில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai