வானிலை

பருவமழையில் முதல் புயல்.! ‘டானா’ பெயர் வந்தது ஏன்? எங்கே கரையை கடக்கும்?

சென்னை : மத்திய அந்தமான் கடற்பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றின் மேலடுக்கு சுழற்சியானது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அக்.22-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குவிந்து, அக்.23-ல் கிழக்கு மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நடப்பு வடகிழக்கு பருவமழையின் முதல் புயல் இதுவாகும். […]

#Cyclone 5 Min Read
cyclones

குடை முக்கியம் மக்களே! இந்த 20 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, […]

#Chennai 4 Min Read
tamil nadu rain news

உருவாகிறது டானா புயல்! எச்சரிக்கை கொடுத்த இந்திய வானிலை மையம்!

ஒடிசா : வரும் அக்டோபர் 23-ஆம் தேதி வங்கக் கடலில் புதிய புயல் உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. அதாவது, வரும் 21-ஆம் தேதி வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது. அதன்பிறகு, இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து புயலாக மாறி வடக்கு வடமேற்கு திசையை நோக்கி கரையைக் கடக்கும் எனவும் கணிக்கப்பட்டு இருந்ததாக முன்னதாக […]

#IMD 5 Min Read
CycloneDana

புயலால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இருக்கா? வெதர்மேன் கொடுத்த விளக்கம்!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்குக்கு பருவமழை தொடங்கியுள்ள காரணத்தால், வருகின்ற டிசம்பர் மாதம் வரும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், கடல்களில் காற்றழுத்த தாழ்வுகளும் உருவாகி வருகிறது. அந்த வகையில், வருகின்ற 21-ஆம் தேதி வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. அதன்பிறகு, இந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறி வடக்கு வடமேற்கு திசையை நோக்கி […]

#Chennai 5 Min Read
Tamil Nadu Weatherman

இந்த 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வானிலை தொடர்பான அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியீட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய […]

#Chennai 3 Min Read
tn rain news

அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 19 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 3 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி,திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

#Chennai 4 Min Read
tamil nadu rain

12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ..வானிலை மையம் அலர்ட்!

சென்னை : வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக […]

#Chennai 3 Min Read
RAIN news

இன்னைக்கு IND vs NZ மேட்ச் நடக்க வாய்ப்பே இல்லை.! வெதர்மேன் ‘ஷாக்’ ரிப்போர்ட்.!  

பெங்களூரு : இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தென்னிந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் தற்போது மழைபெய்து வருகிறது. ஏற்கனவே வடமேற்கு பருவமழை தொடங்கி தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் மழைபெய்து வரும் சூழலில், பெங்களூரு பகுதியிலும் அவ்வப்போது மழைபெய்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் வானிலை நிலவரம் கூறுவது போல சில தனியார் […]

#INDvsNZ 4 Min Read
India vs Newzealand test cricket

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும், […]

#Chennai 4 Min Read
heavy rain IMD update

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குறிப்பாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் கனமழை வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதே போல ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது, இருப்பினும் சென்னையில் நேற்று ஒரு துளி மழைக் கூட பெய்யவில்லை. இந்த நிலையில், தற்போது வட தமிழக […]

#Chennai 3 Min Read
Chennai Rain (1)

இன்னும் இருக்கு!! 22ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (17-10-2024) அதிகாலை 4.30 மணி அளவில் வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில், புதுச்சேரிக்கும் – நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்தது. இந்த நிலையில், அந்தமான் கடல் பகுதியில் வரும் 20ம் தேதி வளிமண்டல சுழற்சி ஒன்று உருவாக உள்ளது. இது வலுப்பெற்று 22ம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் […]

#Chennai 3 Min Read
Bay of Bengal

குடை முக்கியம்!! மாலை 4 மணி வரை இந்த 3 மாவட்டங்களில் மழை பெய்யும்.!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே இன்று அதிகாலை 4.30 மணியளவில் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) மழை பெய்யவிருக்கும் 3 மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி […]

#Chennai 2 Min Read
Heavy rain TN

சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட்! வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்!

சென்னை: தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளிலிருந்து நிறைவு பெற்று, வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடங்கியுள்ளது எனவும், இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது என முன்னதாகவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இந்த நிலையில், அதனைத்தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ள வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் “வடகிழக்கு பருவ மழை தீவிரமாக உள்ளது. இதுவரை இயல்பை விட 94% அதிக […]

#Balachandran 5 Min Read
balachandran weather

சென்னை மக்களே! அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே பெய்த கனமழை சென்னையை புரட்டி போட்டது. இதனால் நகரின் சில இடங்களில் நீர் தேங்கி மக்கள் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பிறகு, மெல்ல மெல்ல மழை குறைந்துள்ளது. முன்னதாக, காணாமலைக்கான ரெட் அலர்ட் சென்னைக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு கணிப்பின்படி, கனமழை ஏதும் பெரிதும் இல்லாமல், மிக கனமழைக்கான வாய்ப்பு சென்னைக்கு குறைந்துள்ளதாக தனியார் வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர். “இன்றிலிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் […]

#Chennai 3 Min Read
chennai rains update

மீண்டும் ரெட் அலர்ட்! இந்த 4 மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நேற்று (15-10-2024) காலை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை 5.30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுது. இன்று (16-10-2024) காலை 8.30 மணி அளவில், அதே பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 400 கிலோமீட்டர் […]

#ChennaiRains 4 Min Read
Heavy Rain - Red Alert

காலை 10 மணி வரை..இந்த 10 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. மேலும், இது தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை அதிகாலை இது நெல்லூர் அருகே கரையைக் கடக்கும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் இன்று […]

#Rain 3 Min Read
Chennai Rain Update

அக்.17-ம் தேதி கரையை கடக்கும் தாழ்வு மண்டலம்.. சென்னையை நோக்கி நகரும் மேக கூட்டங்கள்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (14-10-2024) காலை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (15-10-2024) காலை 5.30 மணி அளவில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுது. இது, நாளை காலை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிடும் என கூறுகின்றனர் வானிலை ஆய்வாளர்கள். பின்னர், அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே […]

Chennai Rains 4 Min Read
chennnai - Low pressure zone

நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை அலர்ட்? முழு விவரம் இதோ!!

சென்னை : தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாளை அக் 16 தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை, அதித கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி,… ரெட் அலர்ட் […]

#Chennai 4 Min Read
weather news

அடுத்த 2 நாள் மழை நிலவரம்., அதி கனமழை எங்கெல்லாம்.? வானிலை ஆய்வு மையம் தகவல்.!

சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கியது குறித்தும், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை குறித்தும் வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை தற்போது குறிப்பிட்டுளளார். அவர் கூறுகையில், ” கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலைப்பகுதியில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இன்றுடன் தென்மேற்கு பருவமழை நிறைவு பெற்று, வடகிழக்கு […]

#Rain 8 Min Read
TN Rain Update

தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்.!

சென்னை : வடகிழக்கு பருவமழை இன்று (அக்டோபர் 15) தொடங்கியுள்ளதாக இந்திய  வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே, வடகிழக்கு பருவமழை இன்றோ நாளையோ தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தென்மேற்கு பருவமழை முழுவதும் நிறைவுபெற்று, தமிழகம், புதுவை, கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே, மழை வெளுத்து […]

#ChennaiRains 3 Min Read
NorthEastMonsoon