FireBolttRiseLuxe [File Image]
உயர்தர ஸ்மார்ட்வாட்ச் மாற்று வயர்லேஸ் ஏர்பட்ஸ் தயாரிப்பாளரான ஃபயர்-போல்ட் (Fire Blot), புதிய ஃபயர்-போல்ட் ரைஸ் லக்ஸை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன், கடந்த நவம்பர் மாதம் ஃபயர்-போல்ட் லுமோஸ் என்கிற ஸ்மார்ட் வாட்ச் ரூ.1,499 க்கு அறிமுகமானது. இப்போது ரைஸ் லக்ஸ் ஸ்மார்ட்வாட்ச்சையும் ரூ.1,499 என்ற விலைக்கே அறிமுகம் செய்துள்ளது.
இந்த வாட்ச் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடியுடன் கூடிய மெட்டல் ஸ்ட்ராப்புடன் வருகிறது. இதனால் ஃபயர்-போல்ட் ரைஸ் லக்ஸ் நிறுவனத்தின் மெட்டல் எடிசன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 240 x 280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 1.85 இன்ச் அளவில் சதுர வடிவிலான எச்டி டிஸ்பிளே உள்ளது.
மொபைல் போனிற்கு வரும் கால், மெஸேஜ் உள்ளிட்டவற்றை மிகத் துல்லியமாக வாட்ச் ஸ்க்ரீனில் காணலாம். ஃபயர்-போல்ட் ஸ்மார்ட்வாட்ச் டிஸ்பிளேவில் சிறப்பான அனுபவத்தை உங்களுக்கு வழங்குகிறது. இதில் இருக்கக்கூடிய புளூடூத் காலிங் வசதி மூலம் உயர்ந்த தரத்திலான அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
இதற்கு ஒரு ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் ஆனது பொருத்தப்பட்டுள்ளது. பயணத்தின் போது இதன் மூலம் எளிதாக கால் செய்ய முடியும். இதில் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஹார்ட் ரேட் மானிட்டர், எஸ்பிஓ2 மானிட்டர், ஸ்லீப் மானிட்டர் போன்ற அம்சங்கள் உள்ளன.
இதனுடன் 123 வித்தியாசமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ்கள் உள்ளன. இந்த வாட்ச் இன்பில்ட் கேம்களுடன் வருகிறது. இதனால் சோர்வாக அல்லது சலிப்பாக இருக்கும்போது இதைவைத்து பொழுதைக் களிக்கலாம். நீர் மற்றும் தூசிலிருந்து பாதுகாக்க ஐபி67 ரேடிட்ங் உள்ளது.
உங்கள் மொபைலில் நீங்கள் கேட்கும் பாடல்களை இதில் கண்ட்ரோல் செய்ய முடியும். போட்டோ எடுக்கும்போது இந்த வாட்ச்சை ஷட்டர் ஆக பயன்படுத்தலாம். பிளாக், கோல்ட், சில்வர் மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய நான்கு வண்ணங்களில் உள்ள ஃபயர்-போல்ட் ரைஸ் லக்ஸ் ரூ.1,500 என்கிற விலையில், அதிகாரப்பூர்வ ஃபயர்-போல்ட் இணையதளம் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் வாங்கிக் கொள்ளலாம்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…